பிரபல டிவி நடிகை தற்கொலை முயற்சி - பரபரப்பு

பிரபல டிவி நடிகை தற்கொலை முயற்சி - பரபரப்பு
X

 நடிகை கட்டா மைதிலி. 

தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றவரை போலீசார் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருபவர், முன்னணி நடிகை கட்டா மைதிலி. இவர், ஐதராபாத் எஸ்.ஆர். நகரில் உள்ள மயங்கிய நிலையில், இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவரது செல்போன் டவர் அடிப்படையில் , சம்பவ இடத்துக்கு விரைந்த பஞ்ஜகுட்டா போலீசார், நடிகை கட்டா மைதிலியை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். மயங்கிய நிலையில் அவர் வீட்டில் இருந்த போது, அவருக்கு அருகில் மதுபாட்டில்களும், ஏராளமான தூக்க மாத்திரைகளும் கண்டெடுக்கப்பட்டன.

நடிகை மைதிலிக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்கனவே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. 2021ம் ஆண்டு செப்டம்பரில், பஞ்ஜகுட்டா காவல் நிலையத்தில் தனது கணவர் ஸ்ரீதர் ரெட்டி மற்றும் 4 பேருக்கு எதிராக அவர் புகார் அளித்திருந்தார்.

இதுதவிர, மோத்தி காவல் நிலையத்திலும், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக நடிகை கட்டா மைதிலி புகார் அளித்து, இது தொடர்பாக குற்றப்பத்திரிகையும் தாக்கலாகி இருந்தது. இச்சூழலில் நடிகை மைதிலி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தெலுங்கு சின்னத்திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags

Next Story