அடிமாட்டு விலைக்கு ஆடிய திரிஷா..! குந்தவைக்கு இது தேவையா..?

அடிமாட்டு விலைக்கு  ஆடிய திரிஷா..! குந்தவைக்கு இது தேவையா..?
X

நடிகை த்ரிஷா 

விஜய்யின் கோட் படத்திற்கு நடிகை திரிஷா மிகவும் குறைந்த சம்பளம் வாங்கிக் கொண்டு ஆடியுள்ளார்.

சினிமா கதம்ப செய்திகள்

விடுதலை 2 எப்போ ரிலீஸ்?

வெற்றிமாறனின் `விடுதலை 2' படப்பிடிப்பு நடந்த நாள்கள் டபுள் செஞ்சுரியைக் கடந்து விட்டது. மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைய இன்னமும் இரண்டு வார படப்பிடிப்பு இருக்கிறதாம். இந்த நிலையில் படமாக்கியவரை உள்ள போர்ஷன்களை வைத்து ஒரு பதிப்பை ரெடி செய்து வைத்திருக்கிறார் வெற்றிமாறன். நான்கரை மணி நேரம் கொண்ட அந்தப் பதிப்பைத்தான் வெளிநாட்டுத் திரைப்பட விழாக்களுக்கு அவர் அனுப்பி வருகிறார். வருகிற டிசம்பர் மாதம் 20-ம் தேதி `விடுதலை 2' திரைக்கு வரும் என அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

பிஸியான அனுஷ்கா

அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகிவிட்டார் அனுஷ்கா. `மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' என்ற ஃபீல் குட் படத்தை அடுத்து தெலுங்கில் `வேதம்' படத்தை இயக்கிய கிரிஷ் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் பெயர், `Ghaati'. அனுஷ்காவுடன் ரம்யா கிருஷ்ணன், விக்ரம் பிரபு ஆகியோரும் நடித்து வரும் இந்தப் படத்தை அமேசான் வெளியிட உள்ளது. இதையடுத்து மலையாளத்தில் பிரபுதேவா, ஜெயசூர்யா நடித்து வரும் `காத்தனார்' படத்திலும் நடித்து முடித்து விட்டார் அனுஷ்கா. இவர் நடித்துப் பெரிதும் பேசப்பட்ட படமான, `பாகமதி'-யின் இரண்டாம் பாகமும் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கவுள்ளதாம்.

ஒரே மாதிரியான சாப்பாடு போடுங்க

விஜயகாந்த் வழியில் இறங்கி விட்டார் விஜய் சேதுபதி. சமீபத்தில் அவரின் படப்பிடிப்பு ஒன்றில் நடித்துவந்த துணை நடிகர்களுக்கு மதிய உணவின் மெனுக்களின் தரம் குறைந்திருக்கிறது. தனது யூனிட்டில் முக்கிய நடிகர்களுக்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களுக்குமான உணவில் வேறுபாடு இருக்கிறது என்பதையும் கேள்விப்பட்டவர், `மனுஷங்க எல்லாரும் ஒரே மாதிரி தான்' என்று சொல்லி வருத்தப்பட்டதுடன், அவருக்கு என்ன உணவோ அதே உணவை யூனிட்டின் கடைசி ஆள் வரைக்கும் கொடுக்கச் சொல்லி விட்டார். யூனிட்டினர் இதனை ஆச்சரியமாகச் சொல்கின்றனர்.

கிங் மேக்கர் ஆர்.எம்.வீ

தமிழ்த் திரையுலகில் ஒருகாலத்தில் 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்தவர் ஆர்.எம்.வீரப்பன். முக்கியமாக, எம்.ஜி.ஆர். நடிப்பில் `நான் ஆணையிட்டால்', `இதயக்கனி', ரஜினியின் நடிப்பில் `பாட்ஷா' உட்பட சூப்பர் ஹிட் படங்களும் இதில் அடங்கும். தமிழகத்தின் சினிமா மற்றும் அரசியல் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த ஆளுமை அவர். ஆர்.எம்.வீ-யின் நினைவைப் போற்றும் விதமாக, அவரைப் பற்றி இன்றைய - வருங்காலத் தலைமுறையினர் முழுமையாகத் தெரிந்துகொள்ளும் வகையில் `தி கிங் மேக்கர்' என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை உருவாக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

குந்தவைக்கு இது தேவையா..?

விஜய்யின் `தி கோட்' படத்தில் மஞ்சள் சேலை கட்டி த்ரிஷா ஆடிய `மட்ட' பாடல் வைரல் ஹிட் ஆனது. இந்தப் பாடலுக்கு முதலில் தெலுங்கின் முன்னணி நடிகை ஸ்ரீலீலாவைத்தான் அணுகினார்கள். ஆனால், அவர் இரண்டு கோடி ரூபாய் சம்பளம் கேட்டதும் பதறிப்போனவர்கள், வண்டியை த்ரிஷா பக்கம் திருப்பிவிட்டார்கள். ஸ்ரீலீலா கேட்ட சம்பளத்தில் கால் பங்கை மட்டும் வாங்கிக்கொண்டு சுமுகமாக ஆடிக்கொடுத்தாராம் த்ரிஷா.

நெல்லை பாஷை கற்றுக்கொண்ட துருவ்

துருவ் விக்ரம், இப்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில், `பைசன் காளமாடன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நெல்லை, தூத்துக்குடிப் பகுதிகளில் நடந்து வருகிறது. இதன் படப்பிடிப்பு தொடங்கும் முன்னதாகவே, நெல்லையிலே போய்த் தங்கி, அந்த மக்களுடன் நன்றாகப் பழகி, அவர்கள் பேசும் நெல்லைத் தமிழையும் கற்று, அந்த மக்களுடன் கபடிப் பயிற்சியும் முடித்து விட்டு... அதன் பிறகே படப்பிடிப்பில் பங்கேற்றார் துருவ். விரைவில் படப்பிடிப்பும் நிறைவடைய இருக்கிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!