துணிவு முக்கிய அறிவிப்பு.. குதூகலத்தில் ரசிகர்கள்

துணிவு முக்கிய அறிவிப்பு.. குதூகலத்தில் ரசிகர்கள்
X
thunivu trailer release date -அஜித்தின் துணிவு படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது.

thunivu trailer release date -அஜித்தின் துணிவு படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது.

அஜீத் குமாரின் துணிவு படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையைப் பெற்றுள்ள லைகா புரொடக்ஷன்ஸ், படத்தின் ப்ரோமோஷனை விண்ணுக்கு எடுத்துச் செல்கிறது. துபாயில் ஸ்கைடைவர்களுடன் காவிய ஸ்டண்ட் ஒன்றை ஏற்பாடு செய்து துணிவு போஸ்டரை வானில் பறக்கவிட்டு, படத்தின் விளம்பரங்களை தயாரிப்பு நிறுவனம் துவக்கியுள்ளது.

இருப்பினும், லைகா நிறுவனம் இதுபோன்ற ஸ்டண்ட் கொண்ட படத்தை விளம்பரப்படுத்துவது இது முதல் முறை அல்ல. 2018 ஆம் ஆண்டில், தயாரிப்பாளர்கள் ரஜினிகாந்தின் 2.0 க்கு இதேபோன்ற நிகழ்வை நடத்தியுள்ளனர்.

லைகாவின் புதிய விளம்பரம் குறித்து அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கும் அதே வேளையில், "ஒரு நல்ல படம் தானே விளம்பரம்" என்று முன்பு கூறிய அஜித்தை பலர் கிண்டல் செய்துள்ளனர்.

எச்.வினோத் இயக்கத்தில், துணிவு திரைப்படம் 2023 ஜனவரியில் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அஜீத் தவிர, மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், சமுத்திரக்கனி, வீரா மற்றும் மமதி சாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

ஹெச்.வினோத்துடன் அஜித் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் துணிவு. இருவரும் இணைந்த நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்கள் வசூல் ரீதியாக கொண்டாடப்பட்டாலும் விமர்சன ரீதியாக முழு வரவேற்பை பெறவில்லை. இதன் காரணமாக இந்தப் படம் மூலம் அஜித்தும், வினோத்தும் தங்களை நிரூபிக்க காத்திருக்கின்றனர். க்ரைம் சம்பந்தப்பட்ட கதை எனவும், முழுக்க முழுக்க அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறார் எனவும் பரவலாக பேசப்படுகிறது.

இதனிடையே வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. இதன் காரணமாக இந்த பொங்கல் ரேஸில் யார் வெல்லப்போகிறார் என்பதை காண திரையுலகம் ஆவலாக இருக்கிறது. ரசிகர்களும் தங்களுக்குள்ளான கருத்து மோதல்களை சமூக வலைதளங்களில் தொடங்கியிருக்கின்றனர். அதற்கேற்றார்போல் வாரிசு தயாரிப்பாளர் தில்ராஜுவின் கருத்து சர்ச்சையாக அதற்கும் அஜித் ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.

thunivu latest update

இந்தச் சூழலில் இரண்டு படங்களிலிருந்தும் பாடல்களும், அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. சில நாள்களுக்கு முன்பு துணிவு படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது. அதற்கு அடுத்ததாக வாரிசு படத்தின் மூன்றாவது பாடல் வெளியனது.

வாரிசு படத்தின் ஆடியோ ரிலீஸ் கடந்த 24ஆம் நடந்தது. இதற்கிடையே துணிவு படத்தில் இடம்பெற்றிருக்கும் கேங்ஸ்டா என்ற பாடலும் கிறிஸ்துமஸ் அன்று வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும் வாரிசு படத்தின் ட்ரெய்லரும், துணிவு படத்தின் ட்ரெய்லரும் டிசம்பர் 31ஆம் தேதி வெளியாகவிருப்பதாக கூறப்படுகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!