"விடுதலை 2" இன்று முதல் திரையரங்கில்..!ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..முதல் பாகத்தையே மிஞ்சும் போலயே!
விடுதலை 2 படம் - முதல் நாள் முதல் காட்சி விமர்சனங்கள்
இந்த ஆண்டில் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமாக இருக்கிறது விடுதலை பாகம் 2 திரைப்படம். இப்படம் டிசம்பர் 20ஆம் தேதியான இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் தங்களின் விமர்சனங்களை சமூகப் வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
விடுதலை படத்தின் வெற்றி
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருக்கும் வெற்றிமாறன் சூரியை கதாநாயகனாக வைத்து "விடுதலை" என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்து பாராட்டைப் பெற்றார்.
இளையராஜாவின் இசை
இளையராஜாவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்தன. "விடுதலை" படத்தை தொடர்ந்து அதன் 2ம் பாகம் வெளியாகும் என முன்னரே பட குழுவினர் அறிவித்திருந்தனர். அதன் பின்னர் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது.
விடுதலை 2 - புதிய நடிகர்கள்
இந்த 2ம் பாகத்தில், நடிகை மஞ்சு வாரியர், அனுராக் கஷ்யப் மற்றும் கிஷோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். முதல் பாகத்தின் முடிவில் குமரேசனால் (சூரி) வாத்தியார் (விஜய் சேதுபதி) கைது செய்யப்படும் நிலையில், அதன் தொடர்ச்சியாக 2ம் பாகம் உருவாகியுள்ளது.
விடுதலை 2 - கதை அம்சங்கள்
2ம் பாகத்தில் விஜய் சேதுபதி வாத்தியாராக மாறுவதற்கு பின்னால் என்ன நடந்தது? சிறையில் இருந்து எவ்வாறு தப்பித்தார்? போன்ற பிளாஷ்பேக் காட்சிகளை பிரதானமாக கொண்டு உருவாகியுள்ளது. மேலும் மஞ்சு வாரியர், விஜய் சேதுபதிக்கு இடையேயான முக்கிய காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
சென்சார் குழுவின் முதல் விமர்சனம்
இந்த நிலையில், "விடுதலை 2" படத்தை பார்த்த சென்சார் குழு முதல் விமர்சனத்தை கூறியுள்ளது. அதன்படி, படத்தில் அதிகளவிலான ஆபாச வார்த்தைகளும் சர்ச்சைக்குரிய வசனங்களும் இருப்பதால் அந்த வசனங்களுக்கு மட்டும் மியூட் போடச்சொல்லி பரிந்துரைத்துள்ளனர்.
வன்முறை காட்சிகள்
மேலும், முதல் பாகத்தை விட 2ம் பாகத்தில் அதிக அளவிலான வன்முறை காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. சென்சார் குழு "விடுதலை 2" படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளது.
படக்குழுவின் பாராட்டு
'ஏ' சான்றிதழ் கொடுத்தாலும் படத்தின் இயக்குநர் வெற்றிமாறனை படக்குழு பாராட்டியுள்ளது. படத்தில் பல காட்சிகள் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாகவும், முதல் பாகத்தை விட 2ம் பாகம் பெரியளவில் வெற்றிபெறும் என்று பாராட்டியுள்ளனர்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு
ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் நடந்த "விடுதலை 2" படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu