ஏன் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை? மனம் திறந்த நடிகை விஜயசாந்தி..!

ஏன் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை?  மனம் திறந்த நடிகை விஜயசாந்தி..!
X

நடிகை விஜயசாந்தி.

தான் ஏன் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்பதற்கான விளக்கத்தை நடிகையும் முக்கிய அரசியல்வாதியுமான விஜயசாந்தி தெரிவித்துள்ளார்.

தமிழ்படங்களில் நடிகை விஜயசாந்தியை யாரும் மறந்து விட முடியாது. இவரது நடிப்பில் வெளிவந்த பூ ஒன்று புயலானது படம் தமிழ் சினிமாவை கலக்கி எடுத்தது. ரஜினி, கமல் படங்களை மிஞ்சும் அளவுக்கு வசூலை வாரிக்குவித்தது. அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்தாலும், அதன் பின்பு தான் விஜயசாந்தி மக்கள் மத்தியில் பெரிய அளவில் அறிமுகம் ஆனார். ரஜினியுடன் நடித்த மன்னன் படத்தில் விஜயசாந்தியின் நடிப்பினை பாராட்டாதவர்களே இருக்க முடியாது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்தவர் நடிகை விஜயசாந்தி. இப்படி தமிழ், தெலுங்கு சினிமாவில் கொடிகட்டிப்பறந்த விஜயசாந்தி, 1998-ம் ஆண்டு முதல் அரசியல் களத்தில் பணியாற்றி வருகிறார். அரசியலுக்குச் சென்றதால் கடந்த 13 ஆண்டுகளாக திரைப்படங்களில் தலைகாட்டாமல் இருந்த விஜயசாந்தி தற்போது பிரபல நடிகர் மகேஷ்பாபுவுக்கு தாயாக நடித்துள்ளார்.

நல்ல கதைகள் அமையாததால் நடிக்காமல் இருந்தேன். மகேஷ் பாபுவுடன் நடிக்கும் படத்தில் கதையில் எனக்கு முக்கியத்துவம் இருந்ததால் சம்மதித்தேன். நல்ல கதாபாத்திரம் அமைந்தால் ஆண்டுக்கு ஒன்றிரண்டு படங்களில் நடிப்பேன். எனக்கு குழந்தைகள் மிகவும் பிடிக்கும். ஆனால் குழந்தைகள் இருந்தால் சுயநலம் வந்துவிடும். சுயநலமிருந்தால் அரசியலில் பொது தொண்டு செய்ய முடியாது. எனவே தான் என் கணவரிடம் குழந்தைகள் வேண்டாம் என்று கூறினேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டார்.

ஜெயலலிதாவும் குழந்தை, குடும்பம் இல்லாமல் சுயநலமின்றி மக்களுக்கு தொண்டு செய்தார். அவரைப் போல் அரசியலில் இருக்கவேண்டும் என்பதற்காகவே குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை.”என்றார்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்