‘LEO’ வெற்றி விழா நிபந்தனைகளுடன் அனுமதி..!

‘LEO’ வெற்றி விழா நிபந்தனைகளுடன் அனுமதி..!
X

லியோ திரைப்பட வெற்றிவிழா (கோப்பு படம்)

சென்னையில் லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவை நடத்த போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான, ‘LEO’ திரைப்படத்தின் வெற்றி விழாவை நவம்பர் 1ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடத்த காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த அக்.19ம் தேதி வெளியான படம் லியோ. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் வெற்றி விழாவை நவம்பர் 1-ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகப்பிரமாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்தது. நடிகர் விஜய் பங்கேற்கும் இந்த விழாவுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி காவல்துறையினரிடம் படத் தயாரிப்பு தரப்பு கடிதம் கொடுத்திருந்தது.

இந்த நிலையில் நேரு விளையாட்டு அரங்கில் நாளை மறுநாள் நடைபெறும் லியோ பட வெற்றி விழாவுக்கு காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. வெற்றி விழாவிற்கான தடையில்லா சான்று தயாராகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சான்று நேற்று மாலை வழங்கப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

விழா நடைபெறும் இடம் விளையாட்டு மேம்பாட்டு மையத்திற்கு சொந்தமானது என்பதால் தடையில்லா சான்றிதழ் மட்டும் போதுமானது. அதில் விழா நடத்த காவல்துறை வழங்கிய நிபந்தனைகள்:

லியோ வெற்றி விழாவை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும். நேரு உள்விளையாட்டரங்கில் மொத்தம் 8000 இருக்கைகள் உள்ளன. காவல் துறை 6000 இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுத்துள்ளது.

பார்வையாளர்களுக்கு 5500 இருக்கைகளும் விஐபிகளுக்கு 500 இருக்கைகளும் ஒதுக்கிக் கொள்ளலாம். அரங்கின் மைய பகுதியில் தேவைப்பட்டால் இருக்கைகளை அமைத்துக் கொள்ளலாம். நிகழ்ச்சி நடத்தும் நிறுவனம் வைப்புத் தொகையாக ரூ. 10 லட்சம் செலுத்த வேண்டும்.

200-300 கார்களுக்கு மட்டும் அனுமதி, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பேருந்தில் வர அனுமதி இல்லை எனக்கூறப்படுகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!