ஒரே வருடத்தில் அதிக படங்களில் நடித்துத் தள்ளிய நடிப்பு ராட்சசன்: கேரக்டரையே புரிஞ்சுக்க முடியல
இப்போதெல்லாம் ஒரு நடிகரின் படங்கள் வருடத்திற்கு இரண்டு வருவதே மிகப்பெரிய சாதனையாக இருக்கிறது. சில நடிகர்கள் படங்கள் 2, 3 வருடங்களுக்கு ஒரு முறை கூட வெளிவருகின்றன. தற்போது வருடத்துக்கு 3,4 படங்கள் வருவது விஜய் சேதுபதிக்கு மட்டும் தான்.
ஆனால் 80களின் இறுதியில் தமிழ் சினிமா நடிகர் ஒருவர் ஒரு ஆண்டில் மொத்தம் 25 தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார். இது மட்டுமல்லாது 3 பிராந்திய மொழி படங்கள் என அந்த ஆண்டு அவர் நடித்த படம் மொத்தம் 28.
மாதத்திற்கு ஒரு படம் என்றாலே வருடத்திற்கு 12 படங்கள் தான் வரும் ஆனால் இவர் 28 படங்களில் நடித்திருக்கிறார்.
1975 ஆம் ஆண்டு வெளியான 'சட்டம் என் கையில்' திரைப்படத்தில் 'விக்கி' என்னும் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானவர் சத்யராஜ். வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம், சிறிய கேரக்டர்கள் என கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் தட்டிக்கழிக்காமல் பயன்படுத்தி, தமிழ் சினிமாவின் முக்கிய அங்கமாக மாறினார்.
சத்யராஜ் 1985 ஆம் ஆண்டு மட்டும் தமிழில் மொத்தம் 25 படங்களில் நடித்திருக்கிறார். சந்தோஷ கனவுகள், செயின் ஜெயபால், காக்கிசட்டை, நான் சிகப்பு மனிதன், நீதியின் நிழல், பிள்ளை நிலா,அன்பின் முகவரி, பகல் நிலவு, அண்ணி, காவல், ஆகாய தாமரைகள், கீதாஞ்சலி, முதல் மரியாதை, ஈட்டி, ஸ்ரீ ராகவேந்திரா, மங்கம்மா சபதம், ஜப்பானில் கல்யாணராமன், மிஸ்டர் பாரத், விக்ரம் போன்ற படங்கள் இந்த 25இல் அடங்கும்.
நடிகர் சத்யராஜ் நடிப்பில் மிக தேர்ந்தவர் என்பதை அவருடைய இரண்டாவது இன்னிங்சிலும் நிரூபித்து வருகிறார். இவருடைய 'கட்டப்பா' கேரக்டர் இவருக்கு மிகப்பெரிய மைல்கல். இப்போதும் பல குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்திக்கொண்டிருக்கிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu