உண்மை சம்பவத்தை தாங்கி வரும் 'பஸ்தர்'..! இன்னொரு கேரளா ஸ்டோரி...!
![உண்மை சம்பவத்தை தாங்கி வரும் பஸ்தர்..! இன்னொரு கேரளா ஸ்டோரி...! உண்மை சம்பவத்தை தாங்கி வரும் பஸ்தர்..! இன்னொரு கேரளா ஸ்டோரி...!](https://www.nativenews.in/h-upload/2023/06/26/1736897-bastar2.webp)
பஸ்தர் பட போஸ்டர்.
கேரளா ஸ்டோரி படம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது நாம் அறிந்த விஷயம்தான். ஆனா, இப்போ அந்த டீம் மீண்டும் இணைஞ்சி இருக்காங்க. அப்படி இணைஞ்ச அவங்களே படம் பத்தி சொல்றதை கேப்போம் வாங்க.
'உங்களை வாயடைக்க வைக்கும் மற்றொரு உண்மை சம்பவம்' பற்றி கேரள பட தயாரிப்பாளர்கள் அடுத்த படமான பஸ்தரை அறிவித்துள்ளனர்.
இயக்குனர் சுதிப்தோ சென் மற்றும் தயாரிப்பாளர் விபுல் ஷாவின் கூறும்போது , பஸ்தர் ஒரு ‘உண்மைச் சம்பவத்தை’ அடிப்படையாகக் கொண்டது. நாங்கள் வெளியிட்டுள்ள முதல் போஸ்டரைப் பாருங்கள்.' என்றனர்.
தி கேரளா ஸ்டோரியின் தயாரிப்பாளர்களான இயக்குனர் சுதிப்தோ சென் மற்றும் தயாரிப்பாளர் விபுல் ஷா ஆகியோர் தங்களின் அடுத்த படமான பஸ்தரை அறிவித்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) தயாரிப்பு பேனரான சன்ஷைன் பிக்சர்ஸ் ட்விட்டரில் தனது அறிவிப்பை வெளியிட்டது.
இந்த படத்தின் தயாரிப்பாளர்கள்,' பஸ்தர் ஒரு 'உண்மை சம்பவத்தை' அடிப்படையாகக் கொண்டது. இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5 ம் தேதி வெளியிடப்படும்.
பஸ்தர் அறிவிப்பு
சன்ஷைன் பிக்சர்ஸ் அவர்களது அலுவலக ட்விட்டரில் , "எங்கள் அடுத்த படமான பஸ்தரை வெளியிடுகிறோம். உங்களை வாயடைக்கச் செய்யும் மற்றொரு உண்மைச் சம்பவத்தைக் காண தயாராகுங்கள். ஏப்ரல் 5, 2024க்கான தேதியை உங்கள் காலண்டர்களில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.' என்று பதிவிடப்பட்டுள்ளது.
படத்தின் போஸ்டரில் துப்பாக்கிக் குண்டுகள் மற்றும் சிவப்புக் கொடிக்குப் பின்னால் பெரிய மற்றும் அச்சுறுத்தும் புகை மேகங்களுக்கு நடுவில் ஒரு காடு இடம்பெற்றுள்ளது. அதோடு துப்பாக்கியும் காணப்படுகிறது. அந்த சுவரொட்டியில், “தேசத்தை தாக்கும் மறைக்கப்பட்ட உண்மைப் புயல் – பஸ்தர்” என்று எழுதப்பட்டிருந்தது.
பஸ்தர் போஸ்டருக்கு கிடைத்துள்ள எதிர்வினைகள்
ட்வீட்டிற்கு பதிலளித்த ஒரு ரசிகர், வரவிருக்கும் படத்தில் வித்யுத் ஜம்வாலை நடிக்க வைக்குமாறு தயாரிப்பாளர்களிடம் கேட்டுக்கொண்டார். "இந்த படத்திற்காக இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் @VidyutJammwal ஐ அணுக வேண்டும்." ரசிகர் ஒருவர் ட்விட்டரில், 'இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்று பதிவிட்டுள்ளார். இது உண்மையை அம்பலப்படுத்துவதில் கடினமான ஒரு சம்பவமாக இருக்கும் என்று நம்புகிறேன். தி கேரளா ஸ்டோரிக்கு தொழில்ரீதியாக பின்னடைவை சந்தித்து இருந்தாலும் மீண்டும் இணைந்ததற்காக குழுவிற்கு பாராட்டுகள்!!!!" என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
கேரளா ஸ்டோரி பற்றி
சுதிப்தோ சென் எழுதி இயக்கிய தி கேரளா ஸ்டோரியில் அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பாலனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படம் மே 5ம் தேதி வெளியானது. விபுல் ஷா தயாரித்து பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடியைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.
மக்கா, இன்னொரு உண்மைச் சம்பவத்தைக் காண தயாராகிட்டீங்களா..?
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu