இளையராஜாவின் 40வது வயதில் பயணங்கள் முடிவதில்லை!

இளையராஜாவின் 40வது வயதில் பயணங்கள் முடிவதில்லை!
X
1982ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ம் நாள் வெளியான படம் பயணங்கள் முடிவதில்லை.

ஒரு இனிய நினைவுக்காக 1980க்கு அப்படியே டைம் மிஷின்ல போனா முதலில் ஞாபகம் வர்றது இளையராஜா. அப்புறம் மோகன், அப்புறம் பயணங்கள் முடிவதில்லை என்ற இந்த படம் என்று தாராளமாக சொல்லலாம். நடிகர்களுக்காக கட் அவுட் வைத்த தமிழகத்தில் இசையமைப்பாளருக்கு கட் அவுட் வைத்து கொண்டாடிய படம் இது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்த போது அவருக்கு 40 வயது தான்.

வறுமையில் கஷ்டப்பட்ட பாடகன் ஒருவன் நல்ல வாய்ப்புகள் வந்த நிலையில் காதலி உட்பட அனைத்தையும் புறக்கணிக்கிறார். இறுதியில் அவருக்கு புற்றுநோய் உள்ளது என அறிந்து தெரிந்து கண்ணீர் விட்டு கலங்கும் கதைதான் பயணங்கள் முடிவதில்லை.

இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஆர்.சுந்தர்ராஜன். அதன் பின் தமிழ் சினிமாவில் பெரிய ரவுண்ட் வந்தார் இவர். இளையநிலா பொழிகிறது, ராகதீபம் ஏற்றும் நேரம், சாலையோரம் சோலை ஒன்று வாடும், ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா, வைகறையில் வைகை கரையில் இறுதியாக மணி ஓசை கேட்டு எழுந்து என்ற இருமல் பாடல் வரை அனைத்தும் இன்றும் தெவிட்டாத தேன்மெட்டுக்கள். இப்படத்தில் இளையராஜா பெரிய இசைவேள்வியே நடத்தி இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

படத்தை தயாரித்தவர் அந்நாளைய கோவை மாவட்ட அதிமுக செயலாளர் கோவைத்தம்பி. மதர்லேண்ட் பிக்சர்ஸ் சார்பாக இப்படத்தை தயாரித்து , எம்.ஜி.ஆர் தான் தன் படத்தை முதலில் தனியாக பார்க்க வேண்டும் என அவரின் தேதிக்காக காத்திருந்து படத்தை வெளியிட்டுள்ளார்.

படத்தின் ப்ரிவ்யூ ஷோ பார்த்து விட்டு மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு இந்த முயற்சி எப்போதும் தொடரட்டும் நல்ல முயற்சி என படக்குழுவினரை எம்.ஜி.ஆர் பாராட்டினாராம்.

கோவை தம்பி, பிரசாத் ஸ்டூடியோவில் அவரை சந்தித்து, "பயணங்கள் முடிவதில்லை என்ற பெயரில் படம் தயாரிக்கப்போகிறேன். அதற்கு நீங்கள் இசை அமைக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டேன். "முழுக் கதையையும் எனக்கு கூறுங்கள். கதைப் பிடித்திருந்தால் தான் இசை அமைப்பேன். கதை பிடிக்காவிட்டால், நீங்கள் எவ்வளவு பணம் தந்தாலும் இசை அமைக்க மாட்டேன்'' என்றார், இளையராஜா.

மறுநாள் பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜாவுக்கு கதை சொல்லத் தொடங்கினார், சுந்தர்ராஜன். "கதையை சுருக்கமாக, மையக் கருத்துடன் சொல்ல வேண்டும். எவ்வளவு நேரம் ஆகும்?'' என்று இளையராஜா கேட்டார். "அரைமணி நேரம் போதும்'' என்று சொன்னார், சுந்தர்ராஜன். கதையை அவர் சொல்லச்சொல்ல, அந்த இசை மேதை கதையில் ஐக்கியமாகி, 2 மணி நேரம் கதை கேட்டார்.


கதையை கேட்டு முடித்ததும், "இந்தப் படத்திற்கு நான் இசை அமைக்கிறேன். நாளை காலை வி.ஜி.பி.யில் பாடல்களை கம்போஸ் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்'' என்று இளையராஜா கூறினார். அவர் கூறியபடி, மறுநாள் இசை அமைக்க ஏற்பாடு செய்தோம். 12 மணி நேரத்தில் 30 டியூன்கள் போட்டார், இளையராஜா. "இதில், காட்சி அமைப்புக்கு ஏற்றபடி, உங்களுக்கு எது தேவையோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்'' என்று கூறினார்.

பயணங்கள் முடிவதில்லை' க்ளைமாக்ஸ் காட்சியை முடிக்கணும் அதுக்கு ஒரு பாட்டு வேணும்னு இளையராஜாவிடன் போனேன். 'இப்போதைக்கு முடியாது இன்னும் ஒரு மாசம் கழிச்சு வாங்கனு சொல்லிட்டார். நான் வேணும்னு அடம்பிடிச்சேன். 'சரி வேணா ஒண்ணு செய்றேன். நான் நாடகத்துக்கு இசை அமைச்சப்போ கங்கை அமரன் எழுதின ஒரு பாட்டு இருக்கு அதைக் கேளுங்க பிடிசிருந்தா எடுத்துக்கோங்க, இல்லைன்னா ஒரு மாசம் கழிச்சு தான்' என்று கறாரா சொல்லிட்டு ஆர்மோனியப் பெட்டியில இசைக்க ஆரம்பிச்சார். இளையராஜாவை ஓடிப்போய் கட்டிபிடிச்சுக்கிட்டேன். 'பயணங்கள் முடிவதில்லை' க்ளைமாக்ஸ் காட்சியில் மோகன்பாட மனதை உலுக்கிய 'வைகறையில் வைகைக் கரையில் வந்தால் வருவேன்' என்கிற அந்தப்பாடல்தான் அது என்கிறார் ஆர்.சுந்தர்ராஜன்.

கிட்டதட்ட ஒராண்டு ஓடிய படம். பலருக்கு வாழ்வளித்த படம். மோகன் மைக் மோகன் ஆனார். ஆர். சுந்தர்ராஜன் அறிமுகமானார். பூர்ணிமா பாக்கியராஜ் பெரிய அளவில் பேசப்பட்டார். ரூ.13 லட்சம் செலவில், நான்கே மாதங்களில் "பயணங்கள் முடிவதில்லை'' தயாராகி விட்டது. 26-2-1982-ல் படம் ரிலீஸ் ஆகியது. திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் நூறு நாட்கள் ஓடிய இப்படம், முக்கிய நகரங்களில் 25 வாரம் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.

சென்னையில் லிட்டில் ஆனந்த் தியேட்டரில் 425 நாட்கள் ஓடி வரலாறு படைத்தது. இத்தனைக்கும் ஆணி வேர் இளையராஜா மட்டுமே.

"நான் காட்சிகளை விளக்குகிறேன். அதற்கேற்ற டியூன்களை நீங்களே தீர்மானியுங்கள்'' என்று சுந்தர்ராஜன் சொல்ல, அப்படி தீர்மானித்தது தான் பயணங்கள் முடிவதில்லை படப்பாடல்கள். சலவை நிலா பொழிகிறது என வைரமுத்து எழுத இளையநிலா பொழிகிறது என ராஜா மாற்றிய பாடல்.

Tags

Next Story
பிஸிக்ஸ், தொழில்நுட்பத்துடன் எவ்வாறு தொடர்புடையது என்பதை தெரிஞ்சிக்கலாம் வாங்க