/* */

ஒரே ஆண்டில் 73 படங்களுக்கு இசையமைத்த இளையராஜா...!

இசைஞானி இளையராஜா 1100 படங்களுக்கு மேல் இசையமைத்து கின்னஸ் சாதனை செய்துள்ளார்.

HIGHLIGHTS

ஒரே ஆண்டில் 73 படங்களுக்கு இசையமைத்த இளையராஜா...!
X

இசையமைப்பாளர் இளையராஜா (கோப்பு படம்)

இசைஞானி இளையராஜாவின் சாதனையில் ஒரு சிறு துளிதான். ஆனால் இசைத்துறைக்கு அவர் செய்த சாதனைகள் ஏராளம். எண்ணற்ற பாடகர்களை அறிமுகப்படுத்தியும், பல இசைக்கலைஞர்களுக்கு வாழ்க்கை கொடுத்தும் எல்லாவற்றையும் விட நவரசங்களுக்கும் இசையால் அழகு சேர்த்து அதை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து இசைக் கடவுளாகவே விளங்கி வருகிறார்.

எவ்வளவு மொக்கைப் படமாக இருந்தாலும் தனது இசை மந்திரத்தால் அப்படத்திற்கு வெற்றியைக் கொடுப்பதில் இசைஞானி கைதேர்ந்தவர். 1980, 1990களின் மத்தில் இசை ராஜ்ஜியமே நடத்தியவர். 1990களில் ராஜா கொடுத்தது இசை ராஜ விருந்து. அத்தனை வெரைட்டியான இசை!

1993-ல் இளையராஜா இசையமைத்த தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை மட்டும் 35க்கும் மேல். தெலுங்கு, மலையாளம், மராத்தி, இந்தியில் அவர் இசையமைத்ததையும் சேர்த்தால் மொத்தம் 73. ஒரு தனி இசையமைப்பாளர் யாரும் செய்திராத உலக சாதனை. யாராலும் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாதது.

இத்தனைக்கும் எந்தப் படத்தின் இசை, பாடல்களாக இருந்தாலும் அவற்றை தன் நேரடி மேற்பார்வையில் செய்பவர் அவர். அவர் அனுமதியின்றி ஒரு சின்ன சப்தம் கூட இடம் பெறாது. எந்த பின்னணி இசை அல்லது பாடலிலும். 1993-ல் வெளியான படங்கள், பாடல்கள் லிஸ்டைப் பார்த்தால் இசைஞானி எவ்வளவு வெரைட்டியான இசையைக் கொடுத்திருக்கிறார் என்பது புரியும்.

எஜமானில் ஆரம்பித்து ஆத்மா, கோயில் காளை, அரண்மனைக் கிளி, மறுபடியும், கிளிப்பேச்சு கேட்கவா, பொன்னுமணி, வள்ளி, ராக்காயி கோயில், உழைப்பாளி, வால்டர் வெற்றிவேல், சின்ன மாப்ளே, சின்ன ஜமீன், ஏழை ஜாதி, காத்திருக்க நேரமில்லை, சின்னக் கண்ணம்மா, மணிக்குயில், ஐ லவ் இந்தியா, உள்ளே வெளியே, கலைஞன், சக்கரை தேவன், உத்தம ராசா... இன்னும் பல படங்கள். இவற்றில் எத்தனை ஹிட் பாடல்கள் என்று நாம் சொல்லவே தேவையில்லை.

அதேபோல்தான் 1992-ம் ஆண்டு. இந்த வருடமும் ஹிட்டடித்த இளையராஜா ஆல்பங்கள் வண்ண வண்ண பூக்கள், மன்னன், செந்தமிழ்ப் பாட்டு, செம்பருத்தி, சின்னவர், பாண்டியன், திருமதி பழனிச்சாமி, தங்க மனசுக்காரன், சின்னத்தாயி, சிங்கார வேலன், சின்னப் பசங்க நாங்க, இன்னிசை மழை, உன்னை வாழ்த்திப் பாடுகிறேன், சின்னக் கவுண்டர், பரதன், ஆவாரம் பூ, தேவர் மகன், நாடோடி பாட்டுக்காரன், நாடோடித் தென்றல், உன்ன நெனச்சேன் பாட்டுப் படிச்சேன், மீரா, தெய்வ வாக்கு.... இன்னும் பல சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒரே வருடத்தில் 73 படங்கள் அத்தனைக்கும் பின்னணி இசை என்பதெல்லாம் நினைத்துப் கூட பார்க்க முடியாது. இத்தனையையும் அவர் எப்படி தனது மூளையில் பதிவு செய்து மொழி வேறுபாடின்றி ஒவ்வொரு படத்திற்கும் தனித்தனியாக இசையமைத்தார் என்பது இசைக் கடவுளுக்கு மட்டுமே அமைந்த பாக்கியம்.

Updated On: 24 Feb 2024 4:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  2. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  3. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  4. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  5. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  6. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  7. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  8. ஈரோடு
    கோடை விடுமுறை கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!
  9. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  10. மாதவரம்
    சரித்திர பதிவேடு குற்றவாளியை கொலை செய்தவர்கள் கைது..!