தமிழ்திரையுலக கர்ணன் சிவாஜியை பற்றி தெரியுமா?
![தமிழ்திரையுலக கர்ணன் சிவாஜியை பற்றி தெரியுமா? தமிழ்திரையுலக கர்ணன் சிவாஜியை பற்றி தெரியுமா?](https://www.nativenews.in/h-upload/2023/06/20/1733714--.webp)
பைல் படம்
தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆருக்கு இணையாக தான தர்மங்கள் வழங்கியவர் சிவாஜி. எம்.ஜி.ஆர்., மக்கள் தொடர்பில் இருந்ததால் அவர் செய்தது வெளியில் தெரிந்தது. சிவாஜி மக்கள் தொடர்பில் இல்லாததால் அவர் செய்தது தெரியவில்லை என வயதில் மூத்த திரையுலகினர் தெரிவித்துள்ளனர்.
சுமார் 40 ஆண்டுகளாக மன்னன் என்ற வார்த்தைக்கு அர்த்தமாகவே வாழ்ந்த ஒரே தமிழ் நடிகர் சிவாஜி தான் என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். கோலிவுட்டில் சுமார் 40 வருடங்களாக பல நுாறு கோடிக்கும் மேல் தான தர்மம் செய்த ஒரே நடிகர் இவர் தான் என்று, தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும் தகவல் ஒன்று ரசிகர்களின் மத்தியில் வைரலாக பேசப்படுகிறது.
ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் அதன் பிறகு 1952 ஆம் ஆண்டு பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிப்புச் சக்கரவர்த்தி தான் செவிலியர் சிவாஜி கணேசன். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என சுமார் 288 படங்களில் நடித்தது மட்டுமின்றி தமிழில் மட்டும் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்து அசத்தியவர்.
இப்போது வரை இளம் நடிகர்களின் இன்ஸ்பிரேஷன் ஆக இருந்து வரும் சிவாஜி, நிஜ வாழ்க்கையில் மன்னன் என்ற வார்த்தைக்கு அர்த்தமாகவே வாழ்ந்து இருக்கிறார். இவருடைய 1953 முதல் 1993 வரை செய்திருக்கும் தான தர்மத்தை பிரபலம் ஒருவர் ஆய்வு செய்து அம்பலப்படுத்தி இருக்கிறார். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுவது மட்டுமல்லாமல் சிவாஜியின் இமேஜை வேற லெவலுக்கு எடுத்து சென்று இருக்கிறது.
அத்துடன் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த அடுத்த வருடம் தொடங்கி, சுமார் 40 வருடங்களாக சிவாஜி செய்த தானதர்மங்கள் மட்டும் 310 கோடியாம். அதுமட்டுமின்றி இலங்கையில் ஒரு ஹாஸ்பிடலையே கட்டி கொடுத்து இருக்கிறார். அத்துடன் காமராஜர் துவக்கி வைத்த ஊட்டச்சத்து சத்துணவு திட்டங்களை, ஜவஹர்லால் நேரு அறிமுகம் செய்த உடனேயே அதற்காக 1 லட்சம் ரூபாயை நன்கொடையாக கொடுத்த முதல் நடிகர் சிவாஜி.
அதேபோன்று பாகிஸ்தான் போர் நடந்தபோது அவரிடம் இருந்த 100 பவுன் எடையுடைய பேனாவை அதற்காக நன்கொடையாக கொடுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி அவர் போட்டிருந்த 450 பவுன் நகையையும் கழட்டிக் கொடுத்து விட்டார். இதன்பிறகு அவருடைய கடைசி காலங்களில் யானைகளையே தான தர்மமாக கொடுத்திருக்கிறார்.
மேலும் யானைப்பாகன் ஒருவர் சிவாஜி இடம் வந்து யானையும் தானும் சரியாக சாப்பிட முடியவில்லை என்று உதவி கேட்டபோது, 2 ஏக்கர் நிலத்தை வாங்கி அதை பட்டா போட்டு அந்த பாகனிடம் கொடுத்து, அதில் விவசாயம் செய்து நீயும் சாப்பிட்டு யானையும் பட்டினி போட்டு விடாதே என்று சொல்லி இருக்கிறார். இவ்வளவு தான தர்மம் செய்த சிவாஜி, ஒருபோதும்இதைப் பற்றி எல்லாம் வெளிப்படுத்தியது கிடையாது. ஏனென்றால் தான தர்மம் செய்வது ஒரு மனிதனின் தவம் என்பதை ஆணித்தரமாக நம்புபவர் சிவாஜி.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu