மொட்டைத் தலையுடன், தனுஷ்..! அடுத்த படத்தின் கெட்டப்பா..? இணையத்தில் வைரல்..!

மொட்டைத் தலையுடன், தனுஷ்..! அடுத்த படத்தின் கெட்டப்பா..? இணையத்தில் வைரல்..!
X

மொட்டைத் தலையுடன் நடிகர் தனுஷ் 

திருப்பதி கோவிலுக்கு வருகை தந்த நடிகர் தனுஷ் தலையை மொட்டையடித்த நிலையில் காணப்பட்டார். நடிகர் தனுஷின் புதிய தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் தனுஷின் புதிய தோற்றம் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் அடுத்த படத்தின் தோற்றம் இதுதானா என்று கேட்டு வருகின்றனர். திருப்பதி கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற நடிகர் தனுஷ் அங்கு மொட்டை போட்டுக்கொண்டுள்ளார். மொட்டையடிக்கப்பட்ட தலையோடு அவரது படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானதால், இது அவரது வரவிருக்கும் படமான D50 க்கான புதிய தோற்றமா அல்லது வெங்கடேசப் பெருமானுக்கு முடி காணிக்கை செலுத்த அவர் நேர்த்திக்கடன் வைத்திருந்தாரா? வேண்டுதல்படி திருப்பதி ஏழுமலையானுக்கு மொட்டை போட்டுள்ளாரா என்று பலவிதமான கேள்விகளைக் கேட்டு ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

நடிகர் தனுஷ் தனது குழந்தைகளான யாத்ரா மற்றும் லிங்கா மற்றும் அவரது தந்தை கஸ்தூரிராஜா மற்றும் தாய் விஜயலட்சுமி ஆகியோருடன் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார். அதிகாலையிலேயே கோவிலுக்குச் சென்ற அவர் அங்கு , அதற்காக அவர் தனது தலை முழுவதும் மொட்டையடித்த தனுஷ் தாடியையும் எடுத்துள்ளார். ஆனால் மீசை அப்படியே இருப்பது போல தெரிகிறது.

அதனால் ரசிகர்கள் அவரது அடுத்த படத்துக்கான தோற்றம் இதுதான் என்று கூறி வருகின்றனர். எது எப்படியோ தனுஷின் மொட்டையடித்த தோற்றம் வைரலாகி வருகிறது.

தொடக்கத்தில் சுமாராக நடித்து வந்த நடிகர் தனுஷ் தற்போது மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்து மிகச் சிறப்பாக நடித்து வருகிறார். அவர் நடித்த அசுரன் படம் பெரிய வரவேற்பு பெற்றது. அதில் அவரது நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது.

இதை க்ளிக் செய்து வீடியோ பார்க்கலாம்.

https://twitter.com/Dhanush_Trends/status/1675713539548540929?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1675713539548540929%7Ctwgr%5Ef37193c738837d638721aab716ab2f7b5c66e564%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Fentertainment%2Ftamil-cinema%2Fdhanush-surprises-fans-with-clean-shaven-head-visits-tirupati-temple-101688373465347.html

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!