சினிமா, சின்னத்திரை படப்பிடிப்பு கிடையாது : ஃபெப்சி தலைவர்

சினிமா, சின்னத்திரை படப்பிடிப்பு கிடையாது : ஃபெப்சி தலைவர்
X

படப்பிடிப்பு (மாதிரி படம்)

திரைப்படம், சின்னத்திரை படப்பிடிப்பு நடைபெறாது என்று ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் சூழலில் மே 31 வரை திரைப்படம் மற்றும் சின்னத்திரை shooting உள்ளிட்ட பணிகள் நடக்காது என்று ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி, கொரோனா பரவல் காரணமாக மே 31 வரை திரைப்படம், சின்னத்திரை படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகள் நிறுத்தப்படுகிறது என்றும் முன்னணி நடிகர், நடிகைகள் திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்றும் வலியுறுத்துள்ளார்.

மேலும், சென்ற வாரம் முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து, கொரோனோ நிவாரண நிதியுதவியாக கூடுதலாக திரைப்பட தொழிலாளர்களுக்கு ரூ.2000 வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாகவும், நடிகர் அஜித் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார் என்றும் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!