படிக்கிற பொண்ணுங்கள அருவா எடுக்க சொல்வதா?
படத்தில் வரும் காட்சி
சோலை ஆறுமுகம் இயக்கத்தில் ஆர்.கே. சுரேஷ் நடித்துள்ள 'காடுவெட்டி' படம் நேற்று வெளியானது. திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களை போலவே இந்த படமும் இருக்கும் என ரசிகர்கள் அதிகளவில் இந்த படத்தை பார்க்க விரும்பவில்லை. ஆனால், தியேட்டர்களில் ஆர்.கே. சுரேஷின் ஆர்மியினர் பட்டாசு வெடித்து கொண்டாடும் காட்சிகள் அதிகளவில் நேற்று சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டன.
மேலும், காடுவெட்டி படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியுள்ளதாகவும் அதற்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி என ஆர்.கே. சுரேஷ் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், அந்த படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியை பலரும் ஷேர் செய்து இப்படியெல்லாம் படத்தில் காட்சிகளை வைக்கலாமா? என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆருத்ரா மோசடி:
தார தப்பட்ட படத்தில் வில்லனாக அறிமுகமான ஆர்.கே. சுரேஷ் பில்லா பாண்டி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். விஷாலின் மருது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஆர்.கே. சுரேஷ் சில படங்களை தயாரித்தும் உள்ளார். ஆருத்ரா மோசடியில் ஆர்.கே. சுரேஷ் ஈடுபட்டதாக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
ஆனால், அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாக கூறப்பட்டது. ஆனால், தான் எங்கேயும் தப்பிச் செல்லவில்லை என்றும் அது பொய்யாக தன் மீது தொடரப்பட்ட வழக்கு என்றும் 15 ஆண்டுகள் சினிமாவில் இருந்திருக்கிறேன். ஒரு செக் பவுன்ஸ் வழக்கு கூட என் மீது இல்லை என காடுவெட்டி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆர்.கே. சுரேஷ் பேசினார்.
யுவன் சங்கர் ராஜாவுடன் பிரச்சனை:
காடுவெட்டி படத்தில் ஹீரோவாக நடித்துள்ள ஆர்.கே. சுரேஷ் அடுத்து தென்மாவட்டம் எனும் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் அந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கப் போகிறார் என்றும் ஒரு போஸ்டரை வெளியிட்டார். உடனடியாக யுவன் தனக்கும் இந்த படத்துக்கும் சம்மந்தம் இல்லை என ட்வீட் போட்டார். நீங்க ஏற்கனவே அக்ரிமென்ட்ல சைன் போட்டு இருக்கீங்க அப்படியெல்லாம் எஸ்கேப் ஆக முடியாது என மிரட்டும் தொனியில் இன்னொரு ட்வீட்டை ஆர்.கே. சுரேஷ் வெளியிட பிரச்சனை பெரிதானது. அதன் பின்னர் என்ன நடந்தது என தெரியவில்லை. உடனடியாக யுவன் இந்த படத்தில் இசையமைக்கவில்லை என ஆர்.கே. சுரேஷ் அமைதியாகி விட்டார்.
காடுவெட்டி ரிலீஸ்:
சோலை ஆறுமுகம் இயக்கத்தில் ஆர்.கே. சுரேஷ், சங்கீர்த்தனா விபின், விஸ்மயா உள்ளிட்ட பலர் நடித்துள்ள காடுவெட்டி திரைப்படம் சில நாட்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என ஆர்.கே. சுரேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விரைவில் சக்சஸ் பார்ட்டி நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அருவா தூக்கும் மாணவி:
தமிழ் சினிமாவில் அதிகளவில் சாதிய படங்கள் வெளியாகி வருவது ரசிகர்களை கடுப்பாக்கி வருகிறது. ஒரு சைடு நசுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம் என படம் எடுக்கின்றனர். இன்னொரு பக்கம் அப்படித்தான் நசுக்குவோம், நீங்க எங்க வீட்டு பெண்களை காதலித்தால் என படம் எடுத்து வருகின்றனர். காடுவெட்டி படத்தில் பள்ளிக்குச் செல்லும் மாணவிக்கு தொல்லை கொடுக்கும் வேறு சாதியை சேர்ந்த பசங்களை அருவா எடுத்து வெட்ட ஆர்.கே. சுரேஷ் மற்றும் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சொல்வது போலவும், அந்த பள்ளி மாணவி அருவா எடுத்து வெட்டுவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
குவியும் கண்டனங்கள்: இதுபோன்ற காட்சிகளை எப்படி ஊக்குவிக்கலாம், சுதந்திரத்தையே ஆயுதம் ஏந்தாமல் வாங்கிய நாட்டில் படிப்பின் முக்கியத்துவத்தை மதிக்காமல் இப்படி அருவா கலாசாரத்தை ஊக்குவிப்பது சரியா என பலரும் ஆர்.கே. சுரேஷுக்கு கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu