நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் எதிர்காலத்தை தீர்மானிக்கபோகும் மாமன்னன், சந்திரமுகி-2...

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் எதிர்காலத்தை தீர்மானிக்கபோகும் மாமன்னன், சந்திரமுகி-2...
X

நகைச்சுவை நடிகர் வடிவேலு. (கோப்பு படம்). 

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் கைவசம் உள்ள மாமன்னன், சந்திரமுகி-2 ஆகிய படங்கள் அவருக்கு கைக்கொடுக்குமா? என்ற கேள்வி சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது.

சினிமா காமெடி நடிகர் வடிவேலுவை பிடிக்காதவர்கள் யாருமே இல்லை. அந்த அளவு காமெடியில் வெளுத்து வாங்கி உலகம் முழுவதும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய நடிகர் வடிவேலு, அரசியல் பிரச்னையில் சிக்கினார். அடுத்தடுத்த திருப்பங்களால் வாய்ப்புகளை இழந்து, ரெட்கார்டு பிரச்னையில் சிக்கினார்.

இதனால் கடந்த 10 ஆண்டுகள் வனவாசம் என்ற நிலை தான் வடிவேலுக்கு இருந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் காமெடி நடிகர் வடிவேலுக்கு சாதகமான சூழல் நிலவியது. இதனை தொடர்ந்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மூலம் கம்பேக் கொடுத்துள்ள வடிவேலு, அடுத்தடுத்து படங்களில் நடிக்க தனது கால்ஷீட்டை தயாராக வைத்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள 'மாமன்னன்' படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார் வடிவேலு. அதேபோல், ராகவா லாரன்ஸுடன் சந்திரமுகி-2 திரைப்படத்திலும் காமெடி கேரக்டரில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருந்தார் வடிவேலு.

ரெட் கார்டு பிரச்சினையால் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மூலம் திரும்பி வந்தார். லைகா தயாரிப்பில் சுராஜ் இயக்கிய இந்தப் படம், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை பெறவில்லை. இதனால் இனிமேல் ஹீரோவாக நடிக்காமல், வழக்கம் போல காமெடி ரூட்டுக்கு திரும்பி விடலாம் என்ற முடிவில் உள்ளாராம் வடிவேலு.

அதேநேரம் உதயநிதியுடன் மாமன்னன் படத்தில் நடித்து முடித்துவிட்ட வடிவேலு, அடுத்து சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் காமெடி அதகளம் செய்து வருகிறார். மாமன்னன், சந்திரமுகி-2 இந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாக உள்ளது. இந்த இரண்டு படங்களின் வெற்றி தான் வடிவேலுவின் சினிமா கேரியரை தீர்மானிக்கும் என விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தொடர்ச்சியாக காமெடி கேரக்டரில் நடிக்க பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறாராம் வடிவேலு. அதேபோல் புதிய கூட்டணியாக இருந்தாலும் பரவாயில்லை, பழைய கூட்டணி என்றாலும் சரி தான் என்ற முடிவில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

வடிவேலும் விஜய் சேதுபதியும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. வெற்றிமாறன் இயக்கும் விடுதலை, மெளனப் படமாக உருவாகும் 'காந்தி டாக்ஸ்' இந்தியில் ஷாருக்கானுடன் ஜவான்', கத்ரினா கைஃப் உடன் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

இதனைத் தொடர்ந்து, 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' இயக்குநர் ஆறுமுக குமாருடன் விஜய் சேதுபதி மீண்டும் இணைவதாக சொல்லப்பட்டது. அந்தப் படத்தை ஆறுமுக குமாரே இயக்கி அவரே தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இந்தப் படம் முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவாகவுள்ளதால் விஜய் சேதுபதியுடன் வடிவேலுவும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்தப் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் சொல்லப்பட்டது.

விஜய் சேதுபதியுடன் வடிவேலு நடிக்க உள்ளது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. விஜய் சேதுபதிக்கு காமெடி கேரக்டர்கள் பற்றி கேட்கவே வேண்டாம். அதேபோல், வடிவேலுவும் சிங்கிளாகவே தெறிக்க விடுவார். இவர்கள் இருவரும் கூட்டணி சேர்ந்தால் ரசிகர்களின் நிலை அவ்வளவு தான் என ரசிகர்கள் கூறி வந்தனர்.

இந்தநிலையில், பைனான்ஸ் பிரச்சினை காரணமாக விஜய் சேதுபதி - வடிவேலு இணைந்து நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்தப் படம் உறுதியாக தொடங்குமா என்றும் இதுவரை எதுவும் தெரியவில்லையாம்.

இதனால் நீண்ட நாட்களுக்குப் பின்னர் திரும்பவும் நடிப்பில் பிஸியாகலாம் என நினைத்திருந்த வடிவேலு, கடும் அப்செட்டில் இருக்கிறாராம். ஏற்கெனவே நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் தோல்வியால், வடிவேலுவின் மார்க்கெட் முடிந்துவிட்டது என விமர்சகர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

இதனால், மீண்டும் காமெடி டிராக் மட்டும் போதும் என வடிவேலு முடிவு எடுத்து உள்ளதாகவும், இந்த முடிவு அவருக்கு பெரும் சாதகமாக இருக்கும் எனவும் சினிமா விமர்சகர்களும், அவரது ரசிகர்களும் கூறி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!