சென்னை கடற்கரையில் புதிய வீடு வாங்கிய நடிகை த்ரிஷா.. அம்மாடியோவ் இவ்வளவு விலையா?...
Trisha House in Chennai
Trisha House in Chennai-கடந்த 1999 ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டம் வென்ற த்ரிஷா தொடர்ந்து நடிகர் பிரசாந்த்-சிம்ரன் நடித்த ஜோடி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறமுகம் ஆனார். தொடர்ந்து, மெளனம் பேசியதே திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான த்ரிஷா இன்று கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்த த்ரிஷா, மீண்டும் கோலிவுட்டில் ரவுண்டு வர தொடங்கி விட்டார்.
பொன்னியின் செல்வனை தொடர்ந்து அடுத்தடுத்து விஜய், அஜித் படங்களிலும் த்ரிஷா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், த்ரிஷா தனது நீண்டநாள் கனவு ஒன்றை நிறைவேற்றி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. திரையுலகில் 20 ஆண்டுகளை கடந்துள்ள த்ரிஷா, மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்து ரசிகர்களின் தூக்கத்தை கலைத்து விட்டார். அதனைத் தொடர்ந்து தற்போது விஜய், அஜித்துடன் மீண்டும் ஒரு ரவுண்டு அடிக்க கிளம்பிவிட்டார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
விஜய் நடிக்க உள்ள தளபதி 67-இல் த்ரிஷா நடிப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல், அஜித்தின் ஏகே- 62 படத்திலும் த்ரிஷா நாயகியாக நடிக்க உள்ளதாக செய்திகள் வருகின்றன. அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். இந்த 2 படங்களிலும் த்ரிஷா நாயகியாக நடிப்பது பற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே த்ரிஷா தனது நீண்ட நாள் கனவு ஒன்றை நனவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தனை கோடி பட்ஜெட்டில் வீடா?
தமிழ், தெலுங்கு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வரும் த்ரிஷா, சென்னையில் தான் வசித்து வருகிறார். அஜித் வீட்டின் அருகே சுமார் 5 கோடி மதிப்பிலான பிளாட்டில் த்ரிஷா வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தற்போது விஜய் வசித்து வரும் நீலாங்கரையில் பிரம்மாண்டமான வீடு வாங்கி உள்ளாராம் த்ரிஷா.
அதுவும் 35 கோடி மதிப்புடைய வீடு என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனாலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. விரைவில் த்ரிஷா அந்த தகவலை வெளியிடுவார் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu