பாக்யராஜை நம்பாத பாரதிராஜா : உண்மையை உடைத்த மணிவண்ணன்..!
இயக்குநர்கள் பாரதிராஜா, மணிவண்ணன், பாக்கியராஜ் (கோப்பு படம்)
1993-ம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்து வெளியான அமைதிப்படை படத்தை மிஞ்சும் ஒரு அரசியல் படம் இதுவரை வெளியாகவில்லை என்று தமிழ் சினிமாவில் பலர் இன்றும் பேசி வருகின்றனர்.
பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தாலும் பாக்யராஜ் மேல் அவருக்கு நம்பிக்கை இல்லை என்று இயக்குனர் மணிவண்ணன் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
1980-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நிழல்கள் என்ற படத்தின் மூலம் எழுத்தாளர் மற்றும் நடிகராக அறிமுகமானவர் மணிவண்ணன். அதனைத் தொடர்ந்து, அலைகள் ஓய்வதில்லை, ஆகாய கங்கை, காதல் ஓவியம் உள்ளிட்ட படங்களில் எழுத்தாளராக பணியாற்றிய மணிவண்ணன், 1982-ம் ஆண்டு வெளியான கோபுரங்கள் சாய்வதில்லை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
மோகன், ராதா, சுஹாசினி உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் மணிவண்ணனுக்கு பெரிய அறிமுகத்தை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து, இளமை கோலங்கள், நூறாவது நாள், 24 மணி நேரம், விடிஞ்சா கல்யாணம், பாலைவன ரோஜாக்கள், ஜல்லிக்கட்டு, அமைதிப்படை, ஆண்டான் அடிமை உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.
இதில் மணிவண்ணன், சத்யராஜ் கூட்டணியில் வெளியான அத்தனை படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்த நிலையில், 1993-ம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்து வெளியான அமைதிப்படை படத்தை மிஞ்சும் ஒரு அரசியல் படம் இதுவரை வெளியாகவில்லை என்று தமிழ் சினிமாவில் பலர் இன்றும் பேசி வருகின்றனர். கடைசியாக 2013-ம் ஆண்டு நாகராஜ சோழன் படத்தை இயக்கிய மணிவண்ணன், அதே ஆண்டு மரணமடைந்தார்.
இதனிடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு மணிவண்ணன் பேசிய வீடியோ பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இதில், கலைஞர் கருணாநிதி பற்றி பேசிய அவர், அடுத்து இயக்குனர் பாரதிராஜா குறித்து பேசியுள்ளார். என்னை கருணாநிதி அழைப்பார். ஆனால் நான் போகமாட்டேன். மீண்டும் மீண்டும் அழைப்பார் என்ன நொண்டி நொண்டி வரிங்க என்று கேட்பார். முதுகு தண்டில் ஆப்ரேஷன் செய்துள்ளதாக சொல்வேன்.
எனக்கும் அதே பிரச்சனை தான் அப்போ உனக்கும் எனக்கும் ஒரே வியாதியா என்று கேட்பார். ஒரு படத்தின் படப்பிடிப்புக்கு பிரம்மாண்ட செட் போட்டாங்க. நான் நடந்து போய் நடித்து விட்டு வந்தேன். ஆனால் படம் வெளியான போது அந்த செட்டே படத்தில் இல்லை. அப்புறம் எதுக்காக செட் போட்டீங்க... இதுதான் நவீன சினிமா. இதில் இருந்து தப்பி பிழைத்தால் தயாரிப்பாளர்களும் நன்றாக இருப்பார்கள் நாமும் நன்றாக இருப்போம் என்பது தான் புதிய இயக்குனர்களுக்கு எனது வேண்டுகோள்.
எனக்கு அரசியல் ஆசை எல்லாம் கிடையாது. இருந்திருந்தால் அப்போதே எம்.பி ஆகியிருப்பேன். இப்போது இருக்கும் எம்பிக்களை விட அந்த கட்சியை அதிகம் தெரிந்தவன் நான். அங்கு சென்று நான் சமாளித்து விடுவேன் என்பது தெரியும். ஆனால் எனது அரசியல் அதுவல்ல. என் அரசியல் மக்களுக்கான அரசியல். பாரதிராஜாவுக்கு நான் இயக்குனர் ஆவேன் என்ற நம்பிக்கை இல்லை. இவன் எங்கயா டைரக்ட் பண்ணப்போறான் என்று அவரை தவிர மற்ற எல்லாரையும் அப்படித்தான் சொல்வார்.
பாக்யராஜூவையும் அப்படித்தான் சொல்வார். பாக்யராஜூடன் உனக்கு என்ன பேச்சு என்று என்னிடம் கேட்பார். இல்ல சார் ஒரு ஊர் காரங்க ஒன்னா சுத்திட்டு இருக்கோம் என்று சொன்னால் அந்த வேலையே வச்சிக்காத என்று சொல்லி 2 நாளைக்கு பேசமாட்டார். அந்த மாதிரி இயக்குனர் அவர். அவர் நிச்சயமாக சிபாரிசு பண்ணி எனக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று சொன்னால் கூட நீங்கள் நம்பி விடாதீர்கள் என்று பேசியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu