"அஜித் மாதிரி புருஷன் வேணும்" : நடிகை திரிஷா சொல்கிறார்..!

அஜித் மாதிரி புருஷன் வேணும் : நடிகை திரிஷா சொல்கிறார்..!
X

நடிகர் அஜித் மற்றும் நடிகை திரிஷா 

அஜித் மாதிரி கணவன் வேண்டும் என நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.

திருமணம் குறித்து பேசியுள்ள நடிகை திரிஷா, எனக்கு விவாகரத்தில் நம்பிக்கை இல்லை. நான் கல்யாணம் செய்து கொண்டு, அதை நோக்கி செல்வதற்கும் விருப்பம் இல்லை. எனக்கு தெரிந்த பல நண்பர்கள் அவர்களது மணவாழ்க்கையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கின்றன.

என்னுடைய வாழ்க்கையும் அப்படி ஆகி விடக்கூடாது என்பதில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன். நான் எனக்கான நபரை தேடிக்கொண்டு இருக்கிறேன். அஜித்தை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஒரு பக்கா ஜென்டில்மேன். அவர் எனக்கு என்ன சாப்பாடு வேண்டும் என்று கேட்பார். அப்படி கேட்பவரை, யாருக்குத்தான் பிடிக்காது.

நானும் அவரும் நிறைய பேசி இருக்கிறோம். அதில் சினிமா சார்ந்த விஷயங்கள் கூட இல்லை. அவர் பலதரப்பட்ட விஷயங்கள் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் நல்ல கணவரும், அப்பாவுமாக இருக்கிறார். அவரை போன்ற நபரை எந்த பெண்ணும் கணவனாக பெற வேண்டும் என்று விரும்புவாள் எனத் தெரிவித்துள்ளார்.


அஜித் தான் கணவராக வேண்டும் என கேட்கவில்லை. அஜித் போல் நல்ல குணம், நடத்தை, பொறுப்புள்ள ஒரு கணவன் தான் வேண்டும் என திரிஷா கேட்டுள்ளார் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். திரிஷா அஜித் போன்ற ஒரு நல்ல குணம் படைத்த ஒருவர் கணவனாக கிடைக்கவேண்டும் என்று கூறுவதில் தவறு இல்லை. நல்லவர்களை ஒப்பிட்டுத்தானே பேசமுடியும்?

அது சரி பின்ன என்ன தமிழ் சீரியல்களில் வரும் காட்சிகள் போல கல்யாணம் ஆன ஒருவனை கல்யாணம் ஆகாத பெண் கல்யாணம் செய்துகொள்ள அந்த ஆணை திருமணம் செய்துகொண்ட மனைவியிடமே சவால் விடுவார்கள். அப்படி ஒரு கலாசாரம் இந்த தமிழ் சீரியல்களில் எப்படி வந்ததோ? கதை என்றாலும் கூட அதில் ஒரு நாகரிகம் வேண்டாமா? பெரும்பாலான தொடர்களில் இதே நிலைதான்.

டிவி தொடர் பார்த்தால் போதும், ஒரு குடும்பத்தை எப்படி கெடுக்கணும்? ஒரு குடும்பத்தில் உள்ள சொத்தை எப்படி கொள்ளை அடிப்பது? சொத்துக்குரியவரை எப்படி கொலை செய்வது? அதற்கு அடியாட்களை எங்கிருந்து உடனே போன் மூலம் கொண்டுவருவது? கோவிலில் கடவுள் முன்னிலையிலேயே நல்லவர்களுக்கு எப்படி தீங்கு செய்வது? வீட்டுக்குள் இருந்துகொண்டே நல்லவர்களாக நடித்துக்கொண்டே பல அதிரடி கெடுதல்களை அரங்கேற்றிவிட்டு ஒன்றுமே தெரியாததுபோல் இருப்பது எப்படி? அப்பப்பா இப்படி எத்தனை நல்லவிஷயங்களை டிவி தொடர்கள் கற்றுத்தருகின்றன தெரியுமா?

நல்ல மனம் படைத்தவர்கள் நிச்சயமாக டிவி தொடர்களை பார்க்கமாட்டார்கள்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!