நடிகை திரிஷா திருமணம் செய்யாதற்கு காரணம் என்ன?

நடிகை திரிஷா திருமணம் செய்யாதற்கு காரணம் என்ன?
X

குந்தவை திரிஷா (கோப்பு படம்)

நடிகை திரிஷா கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்துகொண்டிருக்கிறார்.

நடிகை திரிஷா நடிப்பில் கடைசியாக லியோ படம் வெளியானது. அடுத்ததாக விடாமுயற்சி, தக் லைஃப் உள்ளிட்ட படங்களும் வரவிருக்கின்றன. திரிஷா எவ்வளவு தான் பிஸியாக இருந்தாலும் அவர் எப்போது திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்ற கேள்வி பலரிடமும் கடந்த சில காலமாகவே இருந்து வருகிறது. இந்தச் சூழலில் அது குறித்து புதிய தகவல் ஒன்று கோலிவுட்டில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.

ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக ஸ்க்ரீனில் தலை காட்டியவர் திரிஷா. அதன் பிறகு ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவான லேசா லேசா படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். அந்தப் படம் வெளியாவதற்கு முன்னதாகவே அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்த மௌனம் பேசியதே படத்தில் நடித்து படமும் வெளியாகி விட்டது. முதல் படத்திலேயே திரிஷாவின் நடிப்பும், அழகும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. முதல் இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்கள் பப்ளியான ஹீரோயினைத் தான் கொண்டாடுவார்கள் என்ற மாயையை திரிஷா அடித்து நொறுக்கினார். அவர் நடித்த ஒவ்வொரு படத்திலும் அழகும், திறமையும் கூடிக்கொண்டே போக திரிஷாவுக்கு என்று ரசிகர்களும் கூடிக்கொண்டே போனார்கள். அஜித், விஜய், ரஜினி, கமல், ஆர்யா, சூர்யா என பல ஹீரோக்களுடனும் ஜோடி போட்டிருக்கிறார் திரிஷா.

குந்தவை திரிஷா:

பொன்னியின் செல்வன் நாவலில் வாசகர்களை ரொம்பவே கவர்ந்த சில கதாபாத்திரங்களில் குந்தவையும் ஒன்று. எனவே அந்தக் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் திரிஷா அந்த வெயிட்டேஜை தாங்குவாரா என ரசிகர்களில் சில கேள்வி எழுப்பினர். அவர்களது கேள்விக்கு அவர் தனது நடிப்பால் பதில் சொல்லியிருந்தார்.

இரண்டு பாகங்களிலுமே அவரது நடிப்பு மிரட்டலாக இருந்தது. கடைசியாக அவரது நடிப்பில் லியோ வெளியானது. அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் தற்போது நடித்து வருகிறார். திரிஷா இடையில் சறுக்கலை சந்தித்தார் என்பது உண்மை தான். ஆனால் விடாமுயற்சியுடன் தொடர்ந்து நடித்து வந்த அவருக்கு 96 படம் தரமான கம்பேக்காக அமைந்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் லைம் லைட்டுக்கு வந்தார். அவர் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக டாப் லிஸ்ட்டில் ஹீரோயின்கள் வெகு சிலர் தான். அவர்களில் முதன்மையானவர் திரிஷா என்பது கவனிக்கத்தக்கது.

விடாமுயற்சி படம் மட்டுமின்றி கமல்ஹாசனுடன் மீண்டும் இணைந்து நடிக்கிறார் திரிஷா. மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைஃப் படத்தில் அவர் இணைந்திருப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது.

ஒருபக்கம் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போடும் அவர் மறுபக்கம் ஹீரோயின் ஓரியண்ட்டட் சப்ஜெக்ட்டிலும் கவனம் செலுத்திவருகின்றார். அந்தவகையில் அவர் கௌரவ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். அந்தப் படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்று கூறப்படுகிறது.

மேலும் ஹிந்தி படம் ஒன்றிலும் அவர் கமிட்டாகியிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது. சிரஞ்சீவியுடன் தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

திரிஷா இப்படி பிஸியாக இருந்தாலும் அவர் எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்ற கேள்வி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 40 வயதாகும் திரிஷாவுக்கு ஏற்கனவே வருண் என்பவருடன் நிச்சயம் நடத்தப்பட்டது. ஆனால் அது திருமணம் வரை செல்லவில்லை. அதேபோல் ராணா ரகுபதியுடனான காதலும் சில காரணங்களால் பாதியில் முறிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திரிஷா ஏன் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார் என்ற புதிய தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.

அதாவது நயன்தாரா இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொண்டு நடித்து வந்தாலும் முன்னர் போல் பிஸியாக இல்லை. ஒரு சில படங்கள் மட்டுமே கைவசம் வைத்திருக்கிறார். ஆனால் திரிஷாவோ ஏராளமான படங்களை வைத்திருக்கிறார். எனவே இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நயன்தாராவை வீழ்த்தி லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் வாங்கும் வரை திருமணம் கிடையாது என்று முடிவெடுத்திருப்பதாக பரபர தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!