நடிகர் சிம்புவுக்கு என்னாச்சு? திடீரென மருத்துவமனையில் அனுமதி

நடிகர் சிம்புவுக்கு என்னாச்சு? திடீரென மருத்துவமனையில் அனுமதி
X
திடீர் உடல் நலக்குறைவால், மருத்துவமனையில் நடிகர் சிம்பு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல திரைப்பட நடிகர் சிம்புவின் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து, புதியதாக மேலும் சில படங்களிலும் நடிக்க சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் சிம்பு இன்று திடீரென சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல், கோலிவுட் வட்டாரத்திலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகர் சிம்புக்கு கொரோனா தொற்று இருக்குமா என்ற சந்தேகத்தை பலரும் சமூக வலைதளங்களில் கிளப்பினர். ஆனால், அவருக்கு சாதாரண வைரஸ் காய்ச்சால்தான் என்று, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!