நடிகர் ஆர்யாவின் சொந்தங்கள் : தலைசுத்துனா படிக்காதீங்க..!
நடிகர் ஆர்யா, மனைவி சாயீஷா மற்றும் குழந்தை (கோப்பு படம்)
நடிகர் ஆர்யாவின் மனைவி சாயீஷா யார் யாருக்கு என்ன உறவு முறை வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க. தலைசுத்துனா படிக்கிறத நிறுத்தியிருங்க.
சாயீஷாவின் அப்பா சுமீத் சாஹல். அம்மா ஷஹீன் பானு. சுமீத் ஒரு நடிகர். 1990ல் சாயீஷாவின் அம்மாவை திருமணம் செய்து 2003ல் விவாகரத்து வாங்கி விட்டார். அம்மா ஷஹீன் பானு யாருன்னா இந்தி நடிகை சாய்ரா பானுவின் சகோதரர் சுல்தான் அகமதுவின் மகள். ஷஹீனுக்கு சொந்த அத்தை சாய்ரா பானு. சாய்ரா வின் கணவர் தான் 'முதல் கான்' திலீப் குமார்.
திலீப்குமாரின் சகோதரர் நஸீர் கான். நஸீர்கானின் இரண்டாவது மனைவி பேகம் பரா. பேகம்பராவின் சகோதரர் மகள் தான் நடிகை ருக்ஷானா சுல்தானா. ருக்ஷானாவின் மகள் தான் அம்ரிதாசிங். அம்ரிதா சிங் நடிகர் சைஃப் அலிகான் முதல் மனைவி. மாமியார் நடிகை ஷர்மிளா டாகூர். அமிர்தா சிங் மாமனார் மன்சூர் அலிகான் பட்டோடி. சைஃபோட இரண்டாவது மனைவி கரீனா கபூர். அது பெரிய குடும்பம்..
இப்போ சயீஷாவின் அப்பா கிட்ட போவோம். அப்பா சுமீத் நடிகர். சுமீத் சயீஷா அம்மாவை டைவர்ஸ் பண்ணிட்டு இரண்டாவது திருமணம் செய்தார். அது யாருன்னா ஃபர்ரா..ஃபர்ரா ஆர்யாவோட மாமியார் முறை. இவங்க நடிகை தபுவோட அக்கா. அப்போ ஆர்யாவோட மாமியார் தபு.
அத்தை ஷபானா ஆஸ்மி. மாமா ஜாவேத் அக்தர். அக்தர் முதல் மனைவி ஹனி இரானி. ஹனி இரானி மகன் தான் நடிகர் ஃபர்ஹான் அக்தர். ஜாவேத் அக்தர் முதல் மனைவி ஹனி இரானி அக்கா தான் மேனகா. மேனகாவின் மகள் தான் ஷாருக்கான் படம் 'ஓம் சாந்தி ஓம்' டைரக்டர் ஃபரா கான்.
சாயீஷாவோட சின்னம்மா ஃபர்ரா சயீஷா அப்பாவை திருமணம் செய்யும்முன் வேறொருத்தர் மனைவியாக இருந்தாங்க. 'மாவீரன்' படத்தில் ரஜினிக்கு அப்பாவா நடித்த தாராசிங் மகன் விந்தூ தாரா சிங். தாராசிங்கின் தம்பி ரந்தவா. இவர் மனைவி யாருன்னா நடிகை மும்தாஜ் சகோதரி. தமிழ் மும்தாஜ் இல்லை.ஹிந்தி மும்தாஜ்.
ராஜேஷ்கன்னாவின் ஃபேவரிட் நடிகை மும்தாஜ் தன் மகளை குர்பானி 'ஃபெரோஸ் கானுக்கு திருமணம் செய்து வைத்தார். ஃபெரோஸ் கான் குடும்பத்துக்கு போனா அது அவர் தம்பி சஞ்சய் கான் மூலமா ஹிருத்திக் ரோஷன் ஃபேமிலிக்கு போகும்.
டைவர்ஸ் எல்லாம் செல்லாதுன்னு அறிவிச்சா நம்ம ஆர்யா திலீப்குமார், ஃபெரோஸ்கான், சாய்ரா பானு, தாராசிங், சைஃப் அலிகான், டைரக்டர் ஃபரா கான், ஹிருத்திக் ரோஷன், கரீனா கபூர் வரைக்கும் சொந்தக்காரனாகி விடுவார்.
கேரளாவுல எங்கேயோ பிறந்த ஜம்ஷெட் என்கிற ஆர்யாவுக்கும் மும்பையில் பிறந்த சாயீஷாவுக்கும் பிறந்த குழந்தையின் சந்ததிகள் பழைய பாகிஸ்தான் வரை போவது ஆச்சர்யம். வடநாட்டுக்காரர்களுக்கு தொப்புள்கொடி உறவு சுதந்திரத்துக்கு முன்பான இந்தியாவின் பாக் பகுதி வரை போகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu