விலை குறைப்பால் ஆவின் பால் விற்பனை 2 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளதாம்

விலை குறைப்பால் ஆவின் பால் விற்பனை 2 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளதாம்
X

மாதிரி படம்

சென்னையில் 1 லட்சம் லிட்டரும், பிற மாவட்டங்களில் 1 லட்சம் லிட்டரும் அதிகளவு ஆவின் பால் விற்பனை ஆகியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விலை குறைப்பால் ஆவின் பால் விற்பனை 2 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளதாம்

தமிழகத்தில் ஆவின் பால் விலை குறைப்பின் விளைவால் 2 லட்சம் லிட்டர் பால் விற்பனை அதிகரித்துள்ளது சென்னையில் 1 லட்சம் லிட்டரும், பிற மாவட்டங்களில் 1 லட்சம் லிட்டரும் அதிகளவு விற்பனை ஆகியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் முக ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றவுடன் அவர் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார். முதலாவதாக 5 வாக்குறுதிகளை திட்டங்களாக செயல்படுத்தினார். அதில் ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் விலை குறைக்கப்பட்டது. இதனால் ஆவின் பால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விலை குறைக்கப்பட்ட பிறகும் நிறைய இடங்களில் ஆவின் பால் பழைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது என புகார்கள் வந்தது. இதையடுத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படும் கடைகளுக்கு உரிமம் ரத்து செய்யப்பட்டது.

இது வரையில் 50 விற்பனையாளர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 16-ந்தேதி முதல் ஆவின் பால் விலை குறைப்பு நடைமுறைக்கு வந்தது. ஆவின் பால் அட்டைதாரர்களுக்கும் விலை குறைப்பு செய்யப்பட்டது. தனியார் பால்களின் விலையை விட ஆவின் பால் விலை குறைவாக இருப்பதால் பொதுமக்கள் ஆவின் பாலை அதிகளவில் வாங்குகிறார்கள். ஊரடங்கு காலத்திலும் ஆவின் பால் தடையின்றி மக்களுக்கு கிடைக்க அரசு நடவடிக்கைகள் எடுத்தது.

இந்த விலை குறைப்பால் ஆவின் பால் விற்பனை 2 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளது சென்னையில் 1 லட்சம் லிட்டர் மற்றும் மற்ற மாவட்டங்களில் 1 லட்சம் லிட்டரும் ஆவின் பால் விற்பனை அதிகரித்துள்ளது. மொத்தமாக தமிழகத்தில் 26,10,00 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. ஆவின் பாக்கெட்டில் புகார் எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிக விலைக்கு ஆவின் பால் விற்பனை செய்தால் உடனடியாக பாக்கெட்டில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!