அம்மாபேட்டை அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படை அதிகாரிகள்

அம்மாபேட்டை அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட  பறக்கும் படை அதிகாரிகள்
X

அம்மாபேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினர்.

அம்மாபேட்டையில் தேர்தல் நடைபெற உள்ள பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் போலீஸ் உதவியுடன் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் 5வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு அக்டோபர் 9ஆம் தேதி ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதைத் தடுக்கும் பொருட்டு பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பவானி - மேட்டூர் சாலையில் அம்மாபேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் வாகன சோதனையின் போது கேமரா பதிவுடன் வாகன சோதனைகளில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
ai based agriculture in india