தருமபுரி மாவட்ட 3 பி.டி.ஓ.,க்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை

தருமபுரி மாவட்ட 3 பி.டி.ஓ.,க்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை
X

சோதனை நடைபெற்ற ஏ.பள்ளிபட்டியில் உள்ள பி.டி.ஓ.ஜெயராமன் வீடு.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஓரிரு மாதங்களில் ஓய்வு பெற உள்ள 3 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

தருமபுரி மாவட்டத்தில் பணியாற்றி வரும் மூன்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீட்டில் இன்று காலை 8 மணி முதல் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் ஜெயராமன் ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார். அதேபோல் மதலைமுத்து மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார். மேலும் ஆனந்தன் கள்ளக்குறிச்சி மாவட்ட திட்ட அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்த 3 வட்டார வளர்ச்சி அலுவலர்களும் வருகிற மே மாதத்தில் பணி நிறைவு பெற்று ஓய்வு பெற உள்ளனர்.

இந்நிலையில் ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமனுக்கு சொந்தமான ஏ.பள்ளிப்பட்டி வீட்டிலும், மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மதலைமுத்துவுக்கு சொந்தமான ஏமகுட்டியூர் வீட்டிலும், அதேபோல் திட்ட அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியாற்று ஆனந்தனுக்கு சொந்தமான அரூர் குறிஞ்சி நகர் வீட்டிலும் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதில் மதலைமுத்து பாப்பிரெட்டிபட்டி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய போது நிதி ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையிலேயே தற்போது மதலை முத்துவின் வீட்டில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

மேலும் ஆனந்தன், தருமபுரி மாவட்டத்தில் பணியாற்றும் காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக அவரை இரண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டது. தற்போது கூட முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையிலேயே அவரை மாவட்டம் கடந்த பணி மாறுதலில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் ஜெயராமன் மீது எழுந்த புகாரின் அடிப்படையிலேயே தற்போது இந்த மூன்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் ஓய்வு பெறும் நிலையில் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்களா? வேறு யாரவது புகார் தெரிவித்தாள்ளார்களா? என்பது சோதனை முடிவில் தெரியவரும்.

நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று வட்டார வளர்ச்சி அலுவலர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்துவதால், அரசியல் கட்சிக்கு பணம் உதவி செய்தார்களா அல்லது பணி காலத்தில் ஏதேனும் நடைபெற்ற முறைகேடுகள் காரணமாக இந்த சோதனை நடத்தப்படுகிறது என்று பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் சோதனை நிறைவு பெற்ற பிறகு பணம், சொத்து உள்ளிட்ட ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படுகின்றனவா என்பது தெரியவரும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!