தென்மேற்கு பருவமழை கேரளாவில் முன்கூட்டியே தொடக்கம்
தென்மேற்கு பருவமழை கேரளாவில் வழக்கத்திற்கு முன்னதாகவே தொடங்கியதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.;
தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரளாவில், தென்மேற்கு பருவமழைக்காலம் தான் அதிக மழைப்பொழிவினை தரும். வழக்கமாக ஜூன், முதல்தேதிக்கு பி்ன்னரே தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு இப்போதே இடுக்கி மாவட்டம் முழுவதும், சாரல் தொடங்கி உள்ளது. சில நேரங்களில் லேசான மழை பெய்கிறது. கடுமையான மஞ்சு மூட்டம் நிலவுவதால், ரோட்டில் 5 அடி துாரத்தில் வரும் வாகனங்களை கூட பார்க்க முடியவில்லை.
எனவே கொச்சி- மூணாறு செல்லும் ரோடுகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. தொடர் சாரலை சுற்றுலா பயணிகள் மிகவும் மகிழ்ச்சியாக அனுபவிக்கின்றனர். சூரியநெல்லி கேப்ரோடு அருவி உள்பட பல இடங்களில் உள்ள அருவிகளில் நீர் கொட்டுகிறது. மொத்தத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கியதற்கான அறிகுறிகள் தென்பட்டாலும், மழை வலுவாக பெய்வதற்கு இன்னும் சில நாட்கள் வரை ஆகும். எப்படியும் ஜூன் முதல் தேதிக்கு முன்னரே மழை வலுத்து விடும் என இடுக்கி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.