வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி
தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று அதிகாலை 05.30 மணிக்கு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது;
தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று அதிகாலை 05.30 மணிக்கு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது
இன்று காலை 5.30 மணியளவில் தென்கிழக்கு வங்கக்கடலில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து புதுசேரி, வடதமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரையில் அடுத்த 2 நாட்கள் நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை இன்று 115.5 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. நாளை 204.4 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் சென்னையில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
17ம் தேதி வரை சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள வடதமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.