ஒரே சேலையில் தூக்கிட்டு கொண்ட தம்பதியர் – பள்ளிபாளையத்தில் பரபரப்பு
பள்ளிபாளையம் அருகே, விசைத்தறி தொழிலாளியும் அவரது மனைவியும், வீட்டில் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது;
ஒரே சேலையில் தூக்கிட்டு கொண்ட தம்பதியர் – பள்ளிபாளையத்தில் பரபரப்பு
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே ஆவாரங்காடு பகுதியில் துயரமான சம்பவம் ஒன்று இடம்பட்டது. விசைத்தறி தொழிலாளிகளான சண்முகம் (வயது 49) மற்றும் அவரது மனைவி உஷாராணி (வயது 43) ஆகிய இருவரும் தங்களது வீட்டில் ஒரே சேலியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் இருவருக்கும் லாவண்யா (25) மற்றும் பூபதி (20) என இரு பிள்ளைகள் உள்ளனர். லாவண்யா திருமணமாகி கோவையில் வசித்து வருகிறாள். பூபதி ஈரோட்டில் உள்ள ஒரு துணிக்கடையில் பணியாற்றி வருகிறார். சம்பவம் நடக்குமுன் இருவரும், உறவினர்கள் சிலருடன் இரவு 11:00 மணி வரை பேசிச் சென்றுள்ளனர். அதன் பின்னர் தங்களது வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அடுத்த நாள் காலை, நீண்ட நேரமாகியும் தாயும் தந்தையும் அறையில் இருந்து வெளிவரவில்லை என்பதால் சந்தேகமடைந்த பூபதி அறைக்குள் சென்று பார்த்தபோது, இருவரும் ஜன்னலில் ஒரே சேலியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர். அதிர்ச்சியடைந்த பூபதி கூச்சலிட, அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து போலீசுக்கு தகவல் அளித்தனர். மாலை நேரத்தில் பள்ளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இது தொடர்பாக மகள் லாவண்யா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த தற்கொலையின் பின்னணியில் கடன் பிரச்சனை, குடும்ப தகராறு அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.