இரவில் காம்பவுண்ட் சுவர் ஏறி திருடிய மர்ம நபர்
அலமேடு பகுதியில் வீடுகளை நோட்டமிட்டு பொருட்களை திருடி சென்ற மர்ம நபரால், மக்கள் அச்சமடைந்தனர்;
சுவர் ஏறி குதித்த மர்ம நபர், மக்கள் அச்சம்
பள்ளிப்பாளையம் அருகிலுள்ள அலமேடு பகுதி ஒரு அமைதியான குடியிருப்பு பகுதியாக இருந்தாலும், சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன், இரவு நேரத்தில் சுமார் 25 வயதுடைய ஒரு மர்ம நபர், அந்த பகுதியில் உள்ள வீடுகளின் காம்பவுண்ட் சுவரை ஏறி உள்ளே புகுந்து, ஒவ்வொரு வீட்டையும் கவனமாக நோட்டமிட்டபடி சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. பின்னர், ஒரு வீட்டிற்குள் நுழைந்த அவர், சில பொருட்களை திருடிய பிறகு, மீண்டும் சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்றார். இந்த செயல்கள் அனைத்தும் அந்த வீதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி வீடியோ, நேற்று காலையிலிருந்து வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்ட மக்கள், இப்பகுதியில் பாதுகாப்பு இல்லாத நிலையைக் குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து, இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அலமேடு பகுதி மக்கள் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.