பல்வேறு திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்ட நாமக்கல் கலெக்டர்

வெண்ணந்தூர் பகுதிகளில் நடைப்பெற்று வரும் அரசுத்திட்ட பணிகளை நாமக்கல் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்;

Update: 2025-05-08 05:40 GMT

பல்வேறு திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்ட நாமக்கல் கலெக்டர்

வெண்ணந்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்று வரும் அரசுத்திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் உமா நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வு அந்நியாயங்களை கண்டறிந்து, பொதுமக்களுக்கு பயன்படும் திட்டங்களை வேகமாக நிறைவேற்றும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது.

அளவாய்பட்டி பகுதியில் ‘தாட்கோ’ மூலம் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூட கட்டுமான பணியின் முன்னேற்றம் குறித்து கலெக்டர் நேரில் பார்வையிட்டார். அதேபோல், ஓ.சவுதாபுரத்தில் மகளிர் திட்டத்தின் கீழ் இயங்கி வரும் மகளிர் குழுவினரால் செயல்படுத்தப்படும் தையல் கூடத்தின் செயல்பாடுகளையும் அவர் பார்வையிட்டார்.

மேலும், நடுப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட நரிக்கல் கரடு பகுதியில், மக்கள் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட நடமாடும் ரேஷன் கடை பணியின் நிலை மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வீட்டுமனை பட்டா வழங்கும் பணிகள் பற்றியும் கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின் போது பொதுமக்கள் தேவைகள் மற்றும் நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் கலெக்டர் நேரில் கேட்டு அறிந்தார்.

Tags:    

Similar News