Yercaud Tourist Places In Tamil ஏழைகளின் ஊட்டி எது தெரியுமா?.... குளு குளு ஏற்காடு தாங்க....போகலாமா?....

Yercaud Tourist Places In Tamil சேலம் மாநகர மக்கள் கோடைக்காலத்தில் பலர் குடும்பத்தோடு டூவீலர்களிலேயே ஏற்காடுக்கு கிளம்பி விடுகின்றனர். விடுமுறை நாள் என்றால் கொண்டாட்டந்தான். அதுவும் குட்டீஸ்களுக்கு குஷியோ குஷி.

Update: 2024-02-06 15:34 GMT

இயற்கை எழில் கொஞ்சும்  மலையோடு ஏற்காடு (கோப்பு படம்)

Yercaud Tourist Places In Tamil

தமிழகத்தில் ஏராளமான கோடை வாசஸ்தலங்கள் இருந்தாலும் சேலம், தர்மபுரி, மாவட்ட மக்களுக்கு மிக அருகாமையில் அமைந்திருப்பது ஏற்காடு என்றால் மிகையாகாது. அந்த வகையில் ஏற்காடு சேலம் சேர்வராயன் மலைப்பகுதியில் அமைந்துள்ள கோடை வாசஸ்தலமாகும்.

ஏற்காடு மலைப்பகுதியானது கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள சேர்வராயன் மலைத்தொடர் பகுதியில் அமைந்துள்ள கோடை வாசஸ்தலம் ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 5326 அடி அதாவது மீட்டரில் 1623 மீட்டர் உயரம் கொண்ட மலைப்பகுதியாகும். முன்பு அக்காலத்தில் இப்பகுதியை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஏரியை வைத்து ஏரிக்காடு என அழைத்து வந்தனர். அதுவே பின்னர் மருவி ’’ ஏற்காடு’’ என பெயர் மாற்றம் அடைந்தது.

சேலம் மாநகர மக்கள் கோடைக்காலத்தில் பலர் குடும்பத்தோடு டூவீலர்களிலேயே ஏற்காடுக்கு கிளம்பி விடுகின்றனர். விடுமுறை நாள் என்றால் கொண்டாட்டந்தான். அதுவும் குட்டீஸ்களுக்கு குஷியோ குஷி. சேலத்தில் 36 கி.மீ. தொலைவில் உள்ளதால் காலையில் சென்று மாலையில் திரும்பிவிடுவர் பலர். ஏற்காடு மலைப்பகுதியில் அமைந்துள்ளதால் இதற்கான ரோடுகள் வளைவுகள் கொண்டதாக இருக்கும் . அந்த வகையில் 20 கொண்டைஊசி (ஏர்பின் பென்டு) வளைவுகளைக் கொண்டதாக இம்மலைப்பகுதி அமைந்துள்ளது.

சேலம் மாநகரில் பிரிட்டிஷ் காலத்தில் கலெக்டராக இருந்த காக்பர்ன் என்பவர்தான் ஏற்காடு மலையில் பயிரிடுவதற்கு ஏற்றதாக காபிச்செடி மற்றும் ஆப்பிள் பழ வகைகளை அறிமுகப்படுத்தினால் முதன் முதலாக அதாவது 19 ம் நுாற்றாண்டில். ஏற்காடு சுமார் 383 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.

ஏற்காட்டில் பச்சை பசேலாய் மரம் செடி கொடிகள் இருப்பதால் சில்லென்ற காற்று எப்போதும் வீசும். மேலும் நகரின் மையப்பகுதியில் ஏரி அமைந்துள்ளதால் இதன் குளுமை காற்றும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் வாரந்தோறும் ஏற்காடு வரும் சுற்றுலாப்பயணிகளும் உண்டு. ஏற்காடு மலைப்பகுதியில் உள்ள கிள்ளியூரில் அருவி உள்ளது. இங்கும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு குளித்து மகிழ்வர். ஏற்காடு ஏரியில் தண்ணீர்நிரம்பினால் இங்குள்ள அருவியில் நீர் கொட்டுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 5342 அடி உயரத்திலுள்ள மலைக்கோவிலானது புகழ்பெற்றதாக உள்ளதால் இங்கும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து இறைவனை தரிசித்துவிட்டுசெல்வர்.இங்குள்ள பகோடா பாயி்ன்ட் என்ற பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் பார்த்தால் அனைத்து பகுதிகளிலும் அழகு அழகாக காட்சியளிக்கும்.

ஏற்காட்டினைப்பொறுத்தவரை வருடந்தோறும் கோடைக்காலத்தில் அதிகமான சுற்றுலா பயணிகள் பல மாநிலங்களிலிருந்தும் ஏராளமாக வருவதுண்டு. செப்டம்பர் மாதம் துவங்கி ஜனவரி மாதம் வரை குளிர்காலமானது முடிவுக்கு வரும். இக்காலத்தில் மூடுபனியானது மலை,ரோடு உள்ளிட்டவைகளில் படர்ந்திருக்கும். மாலை நேரங்களில் வெகுவாக இருட்டிவிடும். இதுபோன்ற நேரத்தில் வெப்பநிலையானது12 °C முதல் 24 °C மற்றும் கோடைக்காலத்தில் 16 °C முதல் 30 °C இருக்கும். ஆண்டின் சராசரி மழை அளவு 1500-2000 மிமீ ஆகும்.

Yercaud Tourist Places In Tamil


காபிச்செடி , ஆப்பிள் வகைகள்

ஏற்காடு மலைப்பகுதியின் சீதோஷ்ணமானது காபி பயிர்கள் மற்றும்ஆப்பிள் செடிகள் வளர ஏற்பதாக இருந்ததால் 1820ஆம் ஆண்டு ஆங்கிலேயரான காக்பர்ன் என்பவர் ஆப்பிரிக்காவிலிருந்து காபிச்செடியை கொண்டு வந்து இங்கு நடவு செய்தார். . பலா, நட்சத்திர ஆப்பிள், அத்தி, நீர் ஆப்பிள், பேரி, வாழை, ஆரஞ்சு, கொய்யா, கருப்பு மிளகு, ஏலக்காய் போன்றவை ஏற்காட்டில் விளைகின்றன. சந்தனம், தேக்கு மற்றும் சில்வர் ஓக் மரங்களும் ஏராளமாக இங்கு உள்ளது.

தாவரவியல் பூங்கா

சேலம் மாவட்டத்தில் 1963 ம் ஆண்டில் அமைக்கப்பட்ட 18.4 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட தேசிய தாவரவியல் பூங்கா உள்ளது. இப்பூங்காவில் 3 ஆயிரம் வகையான மரங்கள் உள்ளது. அதேபோல் ஆயிரத்தெட்டுநுாறு செடிகளும் உள்ளன.

ஏற்காடு மலைப்பகுதிகளில் காட்டு விலங்குகளானகாட்டு எருமை, மான், முயல்கள், நரிகள், கீரிப் பிள்ளை, அணில், கௌதாரி, பாம்புகள், குருவி, பருந்து இங்கு வாழ்கின்றன.

மரகத ஏரி

ஏற்காடு மலைப்பகுதி அடைந்தவுடன் நகரின் மையப்பகுதியில் மலைகளில் இருந்து தானாக உருவான ஏரி ஒன்று அமைந்துள்ளது. இதன் பெயர் மரகதஏரி ஆகும். இந்த ஏரியின் நடுவே ஒரு நீருற்றும் இருக்கும். இந்த ஏரி அருகே அண்ணாபூங்கா அமைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ஏரியைச் சுற்றிப்பார்த்துவிட்டு பூங்காவில் காற்றாட அமர்ந்து விட்டு செல்வது வழக்கமா உள்ளது. வருடந்தோறும் மே மாதத்தில் மலர்க்கண்காட்சியும் நடக்கும்.

லேடி சீட்

ஏற்காடு நகரிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் இப்பகுதி அமைந்துள்ளது. இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இரவு நேரங்களில் சேலம் மாநகரின் அழகை ரசிப்பதும் உண்டு. வானிலை மட்டும் சரியாக இருந்தால் மேட்டூர் அணையைக்கூட காணலாம். இங்குள்ள டெலஸ்கோப் மூலம் இயற்கை காட்சிகளை ரசிக்கலாம்.

கிள்ளியூர் பால்ஸ்

ஏற்காடு ஏரியில் இருந்து 3 கி.மீ தொலைவில் கிள்ளியூர் அருவி அமைந்துள்ளது . மழைக்காலங்களில் ஏரியில் அதிகமாக தண்ணீர் வரத்து இருக்கும் நேரங்களில் இங்குள்ள கிள்ளியூர் அருவியில் தண்ணீர் கொட்டும். இதில் குளித்து சுற்றுலா பயணிகள் மகிழ்வதுண்டு.

Yercaud Tourist Places In Tamil



பகோடா பாயிண்ட்

ஏற்காடு மலைப்பகுதியைச்சுற்றிக்காண வரும் சுற்றுலா பயணிகள் காணும் ஒரு இடம் இது. இங்கிருந்தும் சேலம் மாநகரின் அழகை கண்டு ரசிக்கலாம். இப்பகுதியின் அருகே காக்கம்பாடி என்னும் கிராமம் உள்ளது. இம்மலைப்பகுதியில் வாழ்ந்த மக்கள் ஒன்று சேர்ந்து கட்டிய ராமர் கோயில் ஒன்று உள்ளது.

சேர்வராயன் கோவில்

ஏற்காடு மலையின் உச்சியில் அடுக்கடுக்கான தோற்றத்தில் குகையினுள் அமைக்கப்பட்டுள்ள கோயில் இது. இக்கோயிலில் வருடந்தோறும் திருவிழா நடப்பதுண்டு. தமிழகத்தின் பலபகுதிகளிலும் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் இங்கு வந்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துவர். இக்கோயில் தேவி காவேரிக்கும் சேர்வராயன் கடவுளுக்கும் கட்டப்பட்டுள்ளது.

கரடியூர் காட்சி முனை

ஏற்காட்டில் இருந்து12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரி அம்மன் கோவில்

ஏற்காட்டில் இருந்து7 கி.மீ தொலைவில் நாகலூர்

எனும் கிராமப்பகுதியில் அமைந்துள்ளது இந்த கோயில்

Yercaud Tourist Places In Tamil



நல்லூர் அருவி

ஏற்காட்டில் இருந்து 20 கி.மீ தொலைவில் நல்லூர் என்ற கிராமம் உள்ளது. இங்குதான்இந்த அருவி உள்ளது. மழைக்காலத்தில் தான்இந்த இடத்திற்கு சென்றால் அருவியில் தானாக நீர் கொட்டுவதை கண்டு ரசிக்கலாம்.

கோடை விழா

சேலம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டில் ஆண்டு தோறும் கோடைக்காலத்தில் சேலம் மாவட்டநிர்வாகத்தின் சார்பில் கோடை விழாவானது சிறப்பாக நடத்தப்படுகிறது. இதுஒரு வாரம் கொண்டாடப்படுகிறது. இக்கோடைவிழாவில் நாய் கண்காட்சி, மூலிகை கண்காட்சி, படகுப்போட்டி, மலர்க்கண்காட்சி உள்ளிட்டவை நடக்கும்.

போக்குவரத்து

சேலம் மாநகரிலிருந்து ஏற்காடு மலைப்பகுதிக்கு செல்ல இரண்டு வழிகள் உண்டு. அதாவது முதல் வழியானது சேலம் மாநகரிலிருந்து அதாவது அஸ்தம்பட்டியிலிருந்து கோரிமேடு, அடிவாரம் வழியாக ஏற்காட்டினை ச் சென்றடையலாம். இதன் துாரம் 36 கி. மீ. ஆகும்.

இரண்டாவது வழியாக சேலம் அயோத்தியாப்பட்டிணம் சென்று அங்கிருந்து அரூர் சாலையில் உள்ள குப்பனுார் பகுதிக்கு சென்று இடதுபுறமாக வளைந்தால் கொட்டச்சேடு என்ற மலைக்கிராமத்தின் வழியாகவும் ஏற்காடு மலைப்பகுதியை அடையலாம். இதன் துாரம் 46 கி.மீ. ஆகும்.

தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, மற்றும் ஆந்திராவிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருடந்தோறும் இக்கோடை வாசஸ்தலத்திற்கு ஏராளமானோர் வருவது வாடிக்கையான நிகழ்வாக உள்ளது.

Tags:    

Similar News