கோடைக்கால விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகளுக்கு உதவும் வாராந்திர சிறப்பு ரயில்

மேட்டுப்பாளையம் -திருநெல்வேலி இடையே ஜூன் மாத இறுதி வரை மட்டுமே இயக்கப்படவுள்ள இந்த சிறப்பு ரயிலின் இயக்கம் வெற்றி பெற்றால் மேலும் நீட்டிக்கப்படலாம்.

Update: 2022-04-19 05:42 GMT

கோவை, பொள்ளாச்சி, பழனி,மதுரை, சிவகாசி, இராஜபாளையம், தென்காசி, அம்பாசமுத்திரம் வழியாக வருகிற 22-04-2022 வெள்ளிகிழமை முதல் வாரந்தோறும் 3 மாத காலத்திற்கு தற்காலிகமாக நவினரக LHB ரயில் பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.

கோவை, நீலகிரி மாவட்டத்தில் இருந்து திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் உள்ளிட்ட ஏனைய கோவில்கள் உள்ள தென் மாவட்டங்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்பவர்கள், பாபநாசம் அகத்தியர் அருவி, களக்காடு முண்டன்துறை புலிகள் சரணாலயம், இயற்கை எழில்மிகு மாஞ்சோலை மற்றும் குற்றாலத்தில் உள்ள அருவிகளுக்கும், ராஜபாளையத்தில் உள்ள அய்யனார் அருவி செல்லும் சுற்றுலா பயணிகளும், மற்றும் சொந்த ஊர்களுக்கு செல்லும் தென் மாவட்ட மக்கள் இந்த சிறப்பு இரவு நேர ரயிலை பயன்படுத்திக்கொள்ளலாம்


பேருந்து கட்டணத்தை விட குறைந்த கட்டணத்தில், சுகமான பயணம் குடும்பத்துடன் மேற்கொள்ள சிறந்தது.

இதன் விபரங்கள் :

மேட்டுப்பாளையத்திலிருந்து திருநெல்வேலிக்கு வாரந்தோறும் வெள்ளிகிழமைகளில் இரவு 07.45 மணிக்கு புறப்படும்.

முன்பதிவுடன் கூடிய 2-ம் வகுப்பு படுக்கை வசதி ரயில் கட்டணம் மேட்டுப்பாளையம் மற்றும் கோவையில் இருந்து திருநெல்வேலி வரை உள்ள சிறப்பு ரயில் நிற்கும் அனைத்து ஊர்களுக்கும் முறையே ₹400/- மற்றும் ₹385/-

3rd AC ₹ 1100/- ; ₹1050/-

2nd AC ₹ 1525/- ; ₹ 1440/-

ஜூன் மாத இறுதி வரை மட்டுமே இயக்கப்படவுள்ள இந்த சிறப்பு ரயிலின் இயக்கம் வெற்றி பெற்றால் மேலும் நீட்டிக்கப்படலாம், நிரந்தரமாகப்படலாம் என்று கோவை மாவட்ட ரயில் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர், மேலும் இந்த ரயில் இயக்கம் தொடர்ந்தது இயங்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News