ஆயிரப்பேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்: பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

ஆயிரப்பேரி ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் சுடலையாண்டி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.;

Update: 2022-05-02 01:04 GMT

ஆயிரப்பேரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுடலையாண்டி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

பழைய குற்றாலத்தில் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்.

இன்று தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி மன்றங்களில் கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் ஆயிரப்பேரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுடலையாண்டி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உதிய கிருஷ்ணன் கலந்து கொண்டார். கூட்டத்தில் 2020 மற்றும் 21 வரவு செலவு அறிக்கை வாசிக்கப்பட்டது. பழைய குற்றால அருவியில் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி வழங்க வேண்டும். மத்திய மாநில அரசின் திட்டங்கள், ஊட்டச்சத்து மற்றும் வேளாண் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் துணைத்தலைவர் ரேவதி, உறுப்பினர்கள் பட்டமுத்து, முத்துலட்சுமி, இசக்கி பாண்டி, முருக செல்வி, முகமது இப்ராகிம், கால்நடை ஆய்வாளர் பழனிசாமி, சுகாதார ஆய்வாளர் மதிவாணன், கிராம நிர்வாக அதிகாரி சோபியா, தோட்டக்கலை துறை விஜயசந்திரன், வேளாண்துறை நாகராஜன், கல்வித்துறை பாத்திமா யாஸ்மின், ரேஷன் கடை மாரிமுத்து முருகேசன், கிராம உதவியாளர் கிருஷ்ணசாமி, மூர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News