விடிய விடிய கனமழை: குற்றால அருவிகளில் மூன்றாவது நாளாக வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் மூன்றாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-11-30 02:20 GMT

விடிய விடிய பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

விடிய விடிய மழை குற்றால அருவிகளில் மூன்றாவது நாளாக வெள்ளப்பெருக்கு.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் மாவட்டம் முழுவதும் இரவு கனமழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் மூன்றாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குற்றாலம், பழைய குற்றாலம், புலியருவி, ஐந்தருவி என அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடை காரணமாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவி அருகே செல்லாமல் இருக்க காவல் துறையினர் தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

Tags:    

Similar News