உங்கள் ஊருக்கு எப்போது ரயில்? நவ. 4 முதல் அட்டவணையில் மாற்றம்

வரும் 1ம் தேதி முதல், முன்பதிவு இல்லாத ரயில்கள் இயக்கப்படும் நிலையில், முக்கிய ரயில்களின் நேரங்களில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

Update: 2021-10-27 01:30 GMT

தீபாவளி பண்டியையை முன்னிட்டு, ரயில்களில் முன்பதிவு முடிந்ததால், முன்பதிவு இல்லாத பெட்டிகளையும் இணைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இதனை ஏற்ற தெற்கு ரயில்வே, வரும் நவ. 1 தேதி முதல், எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகள் இணைக்கபடும் என்று இனிப்பான அறிவிப்பை வெளியிட்டது.

அதேபோல், 24 முக்கிய ரயில்களின் நேரமும், நவம்பர் 4ம் தேதி முதல், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, எழும்பூா்-கொல்லம் விரைவு சிறப்பு ரயில் (06723) இரணியலை, காலை 9.36 மணிக்கும், குழித்துறைக்கு காலை 9.52 மணிக்கும், கொல்லம் சந்திப்பை நண்பகல் 12.55 மணிக்கும் அடையும். சென்னை எழும்பூா்-கன்னியாகுமரி விரைவு சிறப்பு ரயில் (02633) நாகா்கோவில் சந்திப்பை காலை 5 மணிக்கு சென்றடையும்.

கோவை -மயிலாடுதுறை ஜன்சதாப்தி விரைவு சிறப்பு ரயில் (02084) மயிலாடுதுறைக்கு மதியம் 1.55 மணிக்கு சென்றடையும். நாகா்கோவில்-கோட்டயம் விரைவு சிறப்பு ரயில் (06366) கொல்லம் சந்திப்பை, மாலை 4.55 மணிக்கு அடையும். கோவை -நாகா்கோவில் விரைவு சிறப்பு ரயில் (02668) , மதுரை சந்திப்பை அதிகாலை 12.25 மணிக்கும், விருதுநகருக்கு அதிகாலை 1.13 மணிக்கும் போய்ச்சேரும்.

புவனேஷ்வா்-ராமேசுவரம் விரைவு சிறப்பு ரயில் (08496) , திருச்சியை 4.05 மணிக்கும், புதுக்கோட்டையை மாலை 5.03 மணிக்கும், மானாமதுரையை, மாலை 6.55 மணிக்கும், ராமநாதபுரத்தை இரவு 7.53 மணிக்கும் அடையும். மதுரை-ராமேசுவரம் விரைவு சிறப்பு ரயில் (06655) மானாமதுரை சந்திப்பை இரவு 7.10 மணிக்கும், ராமநாதபுரத்தை இரவு 8.08 மணிக்கும், பாம்பனை இரவு 9.09 மணிக்கும் வந்தடையும் என்று தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Tags:    

Similar News