தொடர் விடுமுறை தினத்தை முன்னிட்டு குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறை தினம் என்பதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

Update: 2021-12-27 03:18 GMT

தொடர் விடுமுறை தினத்தை முன்னிட்டு குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறை தினத்தை முன்னிட்டு குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி ஆகிய அருவிகள் உள்ளது. இங்கு கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 8 மாதத்திற்கு பிறகு கடந்த 20-ஆம் தேதி முதல் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறை தினம் என்பதால் அனைத்து அருவி பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக பழைய குற்றால அருவியில் தண்ணீர் வரத்து சீராக இருப்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்பட்டது. அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

அண்டை மாநிலமான கேரளாவில் தற்போது ஓமிக்ரான் வைரஸ் 300-க்கும் மேற்பட்ட நபர்களை தாக்கியுள்ளது. தமிழக அரசு தொடர்ந்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம், தனிமனித இடைவெளி பின்பற்ற அறிவுரை வழங்கியுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறை தினமாக இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல மாநிலங்களில் இருந்தும் வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

Tags:    

Similar News