குமரியில் சுற்றுலா படகுகள் வரும் 20 ஆம் தேதி வரை ரத்து
குமரியில் சுற்றுலா படகுகள் வரும் 20 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், கன்னியாகுமரியில் சுற்றுலா படகுகள் இயக்கம், வரும் 20 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இதனிடையே, ஏற்கனவே வியாபாரம் இன்றி வாழ்வாதாரம் இழந்து காணப்படும் நிலையில், சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவார்கள் என்பதால் அரசு பேருந்துகள் ரயில்கள் பயணத்தில் 50 % இருக்கைகள் உள்ளிட்ட கொரோனா கட்டுபாடுகளை கடைபிடிப்பது போல, சுற்றுலா படகுகளை இயக்கினால் சுற்றுலா பயணிகளுக்கும் ஏமாற்றம் இருக்காது; உள்ளூர் சிறு குறு நடைபாதை கடை வியாபாரிகளுக்கும் வாழ்வாதாரம் பாதிக்காது என, சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.