சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களே, இதோ உங்களுக்கான சிறப்பு ரயில்கள்!

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, இன்று முதல் சிறப்பு ரயில்களை, தெற்கு ரயில்வே இயக்குகிறது.

Update: 2021-12-24 00:30 GMT

சபரிமலைக்கு, சிறப்பு கட்டணத்தில் இயக்கப்படும் ரயில்களின் விவரம் வருமாறு:

காக்கிநாடா-கொல்லம் இடையே சிறப்பு ரயில், (07139) இன்று இரவு 7.35 மணிக்கும்; மறுமார்க்கமாக கொல்லம்-காக்கிநாடா (07140) இடையே நாளை மறுதினம் (ஞாயிறுக்கிழமை) அதிகாலை 2.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். காச்சிகுடா-கொல்லம் (07141) இடையே, ஜன. 3 மற்றும் ஜன. 10ம் தேதி மாலை 4.20 மணிக்கும்; மறுமார்த்தில் கொல்லம்-காச்சிகுடா (07142) இடையே ஜன. 5ம் தேதி, மற்றும் ஜன. 12ம் தேதி அதிகாலை 12.45 மணிக்கும் ரயில் இயக்கப்படும்.
ஹைதராபாத்-கொல்லம் (07117) இடையே, ஜன. 4ம் தேதி மற்றும் ஜன.11ம் தேதி மதியம் 2.10 மணிக்கும்; மறுமார்க்கத்தில் கொல்லம்- ஹைதராபாத் (07118) இடையே ஜன. 6ம் தேதி மற்றும் ஜன. 13ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கும் செல்லும். காச்சிகுடா-கொல்லம் (07135) இடையே ஜன. 5ம் தேதி, ஜன.12ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கும், மறுமார்க்கமாக கொல்லம்-காச்சிகுடா (07136) இடையே ஜன. 6ம் தேதி மற்றும் ஜன.13ம் தேதி மாலை 5.10 மணிக்கும் சிறப்பு ரயில் செல்லும்.
செகந்திராபாத்-கொல்லம் (07109) இடையே ஜன.7ம் தேதி, ஜன.14ம் தேதி இரவு 7.30 மணிக்கும், மறுமார்க்கமாக கொல்லம்-காச்சிகுடா (07110) இடையே ஜன. 9ம் தேதி மற்றும் ஜன. 16ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கும் சிறப்பு ரயில் புறப்பட்டு செல்லும். செகந்திராபாத்-கொல்லம் (07133) இடையே ஜன. 8ம் தேதி மற்றும் ஜன. 15ம் தேதி அதிகாலை 5.40 மணிக்கும், மறுமார்க்கமாக கொல்லம்-காச்சிகுடா (07134) இடையே ஜன. 9ம் தேதி மற்றும் ஜன. 16ம் தேதி இரவு 7.35 மணிக்கும் சிறப்பு ரயில் சேவை உண்டு.
காச்சிகுடா-கொல்லம் (07053) இடையே ஜன. 9ம் தேதி மாலை 6.30 மணிக்கும், மறுமார்க்கமாக கொல்லம்-காச்சிகுடா (07054) இடையே ஜன. 11ம் தேதி அதிகாலை 6 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News