பழைய குற்றாலத்தில் இரவு நேரங்களில் குளிக்க கோரிக்கை
Old Courtallam- பழைய குற்றாலத்தில் இரவு நேரங்களிலும் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Old Courtallam- தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், ஆகிய மாதங்கள் பருவநிலை மாதங்கள் ஆகும். இந்த காலங்களில் குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி என அனைத்து அருளையும் தண்ணீர் சீராக கொட்டும். இங்கு பெய்யும் சாரல் மழையும் தென்றல் காற்றையும் அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா பரவல் தடை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து இருந்தது. அதன்படி குற்றாலத்தில் குளிக்க அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் பழைய குற்றாலத்தில் மட்டும் இரவு நேரத்தில் குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு குற்றாலத்தில் சீசன் தாமதமாகவே தொடங்கியது. இரவு நேரத்தில் குளிக்க அனுமதி அளிக்காதது வியாபாரிகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
பழைய குற்றாலத்தின் நம்பி சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை கழித்து வந்தனர். ஏற்கனவே கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த வியாபாரிகள் தற்போது தான் தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கி வருகின்றனர். ஆயிரபேரி ஊராட்சியில் பழைய குற்றாலம் கார் பார்கிங் ஏலம் நான்கு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு 48 லட்ச ரூபாய் வரை ஏலம் போனது.
தற்போது அரசு நிர்ணயித்த 38 லட்சத்திற்கு கூட ஏலம் எடுக்க யாரும் முன் வரவில்லை. இரவு நேரத்தில் குளிக்க அனுமதி அளித்தால் மட்டுமே கார் பார்க்கிங் ஏலம் செல்லும். இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே காலநிலை நிலவும். பழைய குற்றாலத்தில் நம்பி வாழும் வியாபாரிகள் பழைய குற்றாலத்தை உடனடியாக இரவு நேரங்களிலும் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2