மண்சரிவால் ஊட்டி மலை ரயில் போக்குவரத்து ரத்து
ஊட்டி மலை ரயில் பாதையிலுள்ள ஆடர்லி எனும் பகுதியில் கனமழையால் பாறைகள் தண்டவாளத்தில் விழுந்தன இதனால் மன ரயில் சேவை ரத்து;
ஊட்டி மலை ரயில் பாதையில் விழுந்துள்ள ராட்சத பாறைகள்.
நீலகிரி மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக இரவில் கனமழை பெய்து வருகிறது. குன்னூர் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இரவில் பெய்த கன மழையால், மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு, பாறைகள் உருண்டன. அதை அப்புறப்படுத்தி ரயில் சேவை தொடர்ந்து வந்தது.
இந்நிலையில், நேற்று இரவு பெய்த கனமழையால், ஆடர்லி எனும் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு, ராட்சத பாறைகள் தண்டவாளத்தில் விழுந்தன. அதை அப்புறப்படுத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால், இன்று மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக, அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.