இந்திய நாட்டிய விழா மாமல்லபுரத்தில் துவக்கம்: ஏராளமானோர் பங்கேற்பு

மாமல்லபுரத்தில், 21ம் ஆண்டு இந்திய நாட்டிய விழா துவங்கியது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.;

Update: 2021-12-24 02:15 GMT

இந்திய நாட்டிய விழாவை, அமைச்சர்கள் தா.மோ அன்பரசன் மற்றும் டாக்டர் மா. மதிவேந்தன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில்,  21ம் ஆண்டு இந்திய நாட்டிய விழா, நேற்று கோலாகலமாக துவங்கியது இவ்விழாவினை குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனகள் துறை அமைச்சர் .தா.மோ அன்பரசன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்தனர்.

தொடர்ந்து 30 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முதல் நாளான நேற்று, ஷோபனா குழுவினரின் பரத நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து,  தினமும் கரகாட்டம்,  மயிலாட்டம்,  ஒயிலாட்டம்,  குச்சிப்புடி,  காவடியாட்டம் உள்ளிட்ட கிராமிய நிகழ்ச்சிகள் அனைத்தும் நடைபெறும்.

நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்கமி, சோழிகநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி அரசு முதன்மை செயலாளர், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மற்றும் தலைவர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் டாக்டர்.சந்தரமோகன்\ரி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News