குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு: பயணிகள் குளிக்க தடை
குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை, சாரல் மழையுடன் இதமான சுழலை ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள்;
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் குற்றால அருவிகள் அமைந்துள்ளது. குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலகட்டமாகும். தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையின் உட்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகமாக கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு காவல்துறையினர் தடைவிதித்துள்ளனர்.
ஓரிரு வாரத்தில் குற்றால சீசன் தொடங்க உள்ள நிலையில் தென்மேற்கு பருவ மழை காரணமாக அருவிகளில் நீர்வரத்தும், அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழையும் சீசன் முன் அனுபவத்தை அளித்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அருவிகளில் செல்பி எடுத்தும் சாரல் மழையில் நனைந்தும் மகிழ்ச்சியை வெளிபடுத்தி வருகின்றனர்.