தென்காசி பகுதியில் சாரல் மழை: குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு

தென்காசி வட்டார பகுதியில் மிதமான சாரல் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு.

Update: 2021-08-28 10:14 GMT

தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை முதலே மேகமூட்டத்துடன் இப்பகுதிகள் ரம்மியமான சூழ்நிலை காட்சியளித்தது.

இன்று காலை முதல் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரித்தது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேலும் நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News