மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-11-28 15:19 GMT

குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு

தமிழகம் முழுவதும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டம் முழுவதும் இன்று மதியம் முதல் திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வெள்ள நீர் குற்றாலம் பஜார் பகுதியில் ஆறாக ஓடத் தொடங்கியது. தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேலும் கடுமையான வெள்ளம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News