கொடைக்கானலில் சுற்றுலா வாகன ஓட்டிகளை மிரள வைக்கும் பனிமூட்டம்
கொடைக்கானலில் பனிமூட்டம் சுற்றுலா வாகன ஓட்டிகளை மிரள வைக்கும் வகையில் உள்ளது.;
தமிழகத்தில் உள்ள இரண்டு கோடை வாசஸ்தலங்களில் ஒன்று ஊட்டி, இன்னொன்று கொடைக்கானல். இதில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மலைகளின் ராணி என்றும், மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டத்திலும் அமைந்துள்ளன.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்தும், உலக நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.
வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைந்திருந்த நிலையில், தற்போது கேரளாவிலிருந்து அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள்பயணிகள் கொடைக்கானலில் குவிந்து வருகின்றனர். கேரளாவில் இருந்து வரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துகாணப்படுகிறது. இதனால் முக்கிய சுற்றுலாத் தலங்களான தூண்பாறை, பைன் மரக்காடுகள், மோயர் பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளில் கேரள சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கொடைக்கானலில் காலை முதல் கடும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால் சாலைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகன ஓட்டிகள் வாகனங்களை செலுத்தி வருகின்றனர்.
மலைச்சாலை முழுவதும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளது. கடும் பனி மூட்டத்தால் சுற்றுலாத்தலங்களில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை காணமுடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இருந்த போதும் குளுகுளு காலநிலையை அனுபவித்து மகிழ்ந்து வருகின்றனர்.