குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.;

Update: 2022-08-01 13:04 GMT

பிரதான அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் கொட்டியது. 

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் தற்போது பருவநிலை நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாக தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், கடையம், சுற்று வட்டார பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இரண்டு பேர் பலியானார்கள். இதனைத் தொடர்ந்து இன்று மதியம் மழை தொடங்கிய உடனே மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதியம் முதலே குளிக்க தடை விதித்திருந்தது.

இந்நிலையில் திடீரென பிரதான அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் கொட்டியது. ஐந்தருவி, புலி அருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவியிலும் தண்ணீர் அதிகரிப்பதால் அனைத்து அருவிகளிலும் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது தொடர்ந்து குற்றாலம் தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் சரல் மழை பெய்வதால் மேலும் தண்ணீர் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News