குற்றால அருவிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்பி ஆய்வு
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் ஆய்வு நடத்தினார்.
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் தற்போது சீசன் துவங்க உள்ளதால் பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான முறையில் வந்து செல்வதற்கும் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிப்பதற்கும் மற்றும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் சென்றுவர தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் ஆய்வு நடத்தினார். அப்போது அதிகாரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினார்.