குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி இல்லை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
தென்காசி மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான குற்றாலம் அமைந்துள்ளது. தற்போது தமிழக அரசு ஊரடங்கு தளர்வுகளில் சுற்றுலா தளம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அருவிகள் சார்ந்த சுற்றுலாத்தலங்கள் குறித்த தெளிவான தகவல்கள் இல்லை.
இந்நிலையில், நாளை முதல் குற்றால அருவிகள் திறக்கப்படும் என பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும், குற்றாலத்தில் நம்பி வாழும் வியாபாரிகளும் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் குற்றாலதட்டிக் குளிக்க அனுமதிப்பது தொடர்பாக தமிழக அரசிடம் இருந்து எவ்வித வழிகாட்டு நெறிமுறைகளும் வராததால், குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மாவட்ட நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு, குற்றாலம் வியாபாரிகள் மற்றும் பொது மக்களை ஏமாற்றமடையச்செய்துள்ளது .