மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை: குற்றால அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு.

Update: 2022-04-13 05:21 GMT

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு.

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, கடையம், ஆலங்குளம், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதல் இடியுடன் கூடிய மழை பெய்தது. அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் குற்றாலத்தில் உள்ள பேரருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.

தொடர்ந்து குற்றாலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குளிர்ச்சியான காலநிலை நிலவுவதால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வர தொடங்கி உள்ளனர். தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பகல் வேளைகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மாலை நேரத்தில் பெய்கின்ற மழை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

Similar News