ஊட்டி சுற்றுலா பயணிகளுக்கு தரமான உணவு வழங்க கலெக்டர் அறிவுரை

ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டு் என நீலகிரி மாவட்ட கலெக்டர் அறிவுரை வழங்கி உள்ளார்.

Update: 2023-05-01 13:55 GMT
இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டி.

நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில், கோடை விழாவை முன்னிட்டு, ஓட்டல் மற்றும் தங்கும் விடுதிகள், பேக்கரி, உணவக உரிமையாளர்கள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோர் கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து கலெக்டர் அம்ரித் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பேசியதாவது:-

தற்போது தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவக்கூடிய இதமான கால நிலையை அனுபவிக்க தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடு களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும், ஓட்டல் தங்கும் விடுதி உரிமையாளர்கள் தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் நகரின் பிரதான சாலைகளை ஒட்டி இடங்களில் அமைந்துள்ள ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகளை வெளி யில் அழைத்து செல்லும் போது வாகனங்களை சாலைகளில் நடுவில் நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒதுக்கப்பட்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது. மேலும் தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு அறிவுரைகளை தெரிவிக்க வேண்டும்.

உணவக உரிமையாளர்கள், பேக்கரி உரிமையாளர்கள் சுற்றுலா பயணிக ளுக்கு தரமான உணவினை வழங்க வேண்டும். வாகனங்களில் வரும் சுற்றுலாப்பயணிகளிடம் தங்களது வாகனத்தினை உரிய பார்க்கிங் பகுதியில் நிறுத்துமாறு அறிவுறுத்த வேண்டும். சாலையோர வியாபாரிகள் நகரின் சாலையோரங்களில் நடைபாதை கடைகள் அமைத்து பாதசாரிகள் மற்றும் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறு செயல்பட வேண்டும். மேலும் நகராட்சி சார்பில் சுற்றுலா பயணிகள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குடிநீர் பாட்டி ல்களை பயன்படுத்தா தவாறும், குப்பைகளை வனப்பகுதிகளில் கொட்டாதவாறும், உள்ளாட்சி அமைப்பின் சார்பில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி மற்றும் மொபைல் கழிப்பிடங்கள் அமைத்தும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடமாடும் மருத்துவ முகாம் நடத்தபட வேண்டும் எனவும், சுற்றுலா பயனிகள் மற்றும் உள்ளூர் பொது மக்கள், பல்வேறு சங்க நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனப்ரியா, வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) பொது மேலாளர் நடராஜ், வட்டாட்சியர் ராஜசேகர், ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதிகள் உரிமையாளர்கள், நடைபாதை வியாபாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News