குமரியில் மீண்டும் படகு போக்குவரத்து: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

குமரியில் மீண்டும் சுற்றுலா சொகுசு படகு போக்குவரத்து தொடங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2022-01-20 01:45 GMT

கோப்பு படம் 

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடற்கரைகள், பூங்காக்கள், நீர்வீழ்ச்சிகள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு,  பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்லவும்,  பார்வையிடவும் தமிழக அரசு தடை விதித்தது. அதன்படி கன்னியாகுமரி சுற்றுலா தலம் முழுவதுமாக அடைக்கப்பட்டதோடு,  அங்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. சுவாமி விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில்,  22 நாட்களுக்குப் பின்னர் சுவாமி விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கான சொகுசு படகு போக்குவரத்து , நேற்று மீண்டும் தொடங்கியது. அதன்படி படகு தளத்திற்கு வந்த சுற்றுலா பயணிகளில், 2 டேஸ் தடுப்பூசிகள் செலுத்தி கொண்ட சுற்றுலா பயணிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு கிருமிநாசினி கொடுக்கப்பட்டு, முக்காகவசம் அணியவும் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது. சொகுசு படகு போக்குவரத்து காரணமாக சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News